INDvsWI T20 : டி20 தொடருக்கான போட்டிகளின் அட்டவணை. எந்த சேனலில் பார்க்கலாம் – எத்தனை மணிக்கு?

INDvsWI
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி தற்போது நடைபெற்று முடிந்துள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

SKY

- Advertisement -

இந்த தொடருக்கான இரு அணிகளும் ஏற்கனவே கொல்கத்தா சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்திய அணியில் இருந்து மூன்று வீரர்கள் கே.எல் ராகுல், அக்ஷர் பட்டேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் காயம் காரணமாக இந்த டி20 தொடரில் இருந்து வெளியேறி உள்ளனர். அவர்களுக்கான மாற்று வீரர்களையும் இந்திய அணி அறிவித்து விட்டது.

அவர்களை தவிர்த்து தற்போது மீதமுள்ள இந்திய வீரர்கள் இந்த தொடருக்காக தயாராகி வருகின்றனர். அதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் அணியும் தற்போது இந்த டி20 தொடரில் பங்கேற்று விளையாட தயாராக இருக்கிறது. கொரோனா அச்சம் காரணமாக 3 ஒருநாள் போட்டிகளும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது.

pollard 1

அதேபோன்று தற்போது அதே காரணத்தினால் இந்த மூன்று டி20 போட்டிகளும் கொல்கத்தா மைதானத்தில் மட்டுமே நடைபெற உள்ள நிலையில் இந்த தொடருக்கான டி20 போட்டிகளின் அட்டவணை மற்றும் மைதான விவரம், போட்டி நேரம் என அனைத்தையும் நாங்கள் உங்களுக்காக இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

- Advertisement -

அதன்படி இந்த டி20 தொடரின் முதலாவது போட்டி நாளை பிப்ரவரி 16-ஆம் தேதி துவங்குகிறது. அதனைத் தொடர்ந்து 2-வது டி20 போட்டி பிப்ரவரி 18-ஆம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி பிப்ரவரி 20-ஆம் தேதியும் நடைபெற உள்ளன. மூன்று போட்டிகளும் இந்திய அணி நேரப்படி இரவு ஏழு முப்பது மணிக்கு (7.30PM)கொல்கத்தா மைதானத்தில் நடைபெறும். இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும சேனல்கள் நேரலையாக ஒளிபரப்பு செய்கின்றன.

இதையும் படிங்க : ஐபிஎல் மெகா ஏலம் 2022 : எத்தனை வீரர்கள் விற்கப்பட்டார்கள்? எந்த அணிக்கு? எவ்வளவு தொகை? – மெகா லிஸ்ட் இதோ

அதுமட்டுமின்றி ஹாட்ஸ்டார் ஆப்பிலும் இந்த போட்டிகளை கண்டு களிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பம்சம். ஏற்கனவே ஒருநாள் போட்டிகளை எளிதாக கைப்பற்றிய இந்திய அணியானது இந்த டி20 தொடரை கைப்பற்ற கடினமாக போராட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் டி20 போட்டிகளை பொறுத்தவரை அதிக மேட்ச் வின்னர்களை வைத்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்திய அணி எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement