மே.இ தொடருக்கான வர்ணனையாளர்கள் அறிவிப்பு! ஆனால் முக்கியமான அவர் இல்லையே – காரணம் என்ன

Commentary
- Advertisement -

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள இந்திய கிரிக்கெட் அணி வரும் பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாட உள்ளது. வரும் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் துவங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்திய சுற்றுப் பயணத்தில் முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் பின்னர் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் நடைபெற உள்ளன. இந்த தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இத்தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலி சாதாரண வீரராக விளையாட உள்ளார்.

INDvsWI

- Advertisement -

வர்ணனையாளர்கள்:
இந்த சுற்றுப் பயணத்தில் முதலில் நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முழுவதும் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது. அதன்பின் துவங்க உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முழுவதும் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த தொடரை இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப் வாயிலாகவும் நேரடியாக வீடுகளில் இருந்தே கண்டு களிக்கலாம். இந்நிலையில் இந்த தொடரில் வர்ணனை செய்து ரசிகர்களை மகிழ்விக்க உள்ள வர்ணனையாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

LS

வர்ணனையாளர்கள்:
அந்த அறிவிப்பின் படி இந்த தொடரில் இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், முன்னாள் வீரர்கள் தீப்தாஸ் குப்தா மற்றும் அஜித் அகர்கர் அகியோருடன் தமிழகத்தை சேர்ந்த “லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் மற்றும் முரளி கார்த்திக்” ஆகியோரும் சேர்ந்து வர்ணனை செய்ய உள்ளார்கள். அத்துடன் வெஸ்ட்இண்டீஸ் நாட்டிலிருந்து அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் “இயன் பிஷப்” பிரத்யேகமாக வரவழைக்கக்கப்பட்டு இந்த தொடரில் வர்ணனை செய்ய உள்ளார்.

- Advertisement -

இதில் தமிழகத்தை சேர்ந்த லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் ஒருநாள் தொடருக்கு மட்டும் வர்ணனை செய்ய உள்ளதாகவும் அதன் பின் நடைபெறும் டி20 தொடரில் வர்ணனை செய்யமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

shastri

முக்கியமானவர் இல்லயே :
இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வர்ணனையாளர் ரவி சாஸ்திரியின் பெயர் இடம்பெறவில்லை. ஏனெனில் இந்தியாவில் இருக்கும் வர்ணனையாளர்களில் ரவி சாஸ்திரியின் குரலுக்கு இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். 2007 டி20 உலகக்கோப்பை 2011 உலககோப்பை ஆகிய ஆண்டுகளில் இந்தியா கோப்பையை வென்றபோது அவர் செய்த வர்ணனைகள் என்றும் மறக்க முடியாது.

- Advertisement -

குறிப்பாக 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் எம்எஸ் தோனி சிக்ஸர் பறக்க விட்டு இந்தியாவை வெற்றி பெற செய்ய அதை ரவிசாஸ்திரி வர்ணனை செய்யும் அந்த தருணத்தை இப்போது நினைத்தாலும் கூட ஒவ்வொரு இந்திய ரசிகருக்கும் புல்லரிக்கும்.

இதையும் படிங்க : கேப்டன் விராட் கோலியின் வளர்ப்பில் நட்சத்திரமாக உருவெடுத்த 4 தரமான இளம் வீரர்கள் – லிஸ்ட் இதோ

என்ன காரணம்:
அப்படிபட்ட தரமான வர்ணனையாளரான ரவி சாஸ்திரி இந்தியாவின் பயிற்சியாளராக செயல்பட்டதால் சமீப காலங்களாக கிரிக்கெட் வர்ணனை செய்வதில்லை. ஆனால் கடந்த மாதம் அவர் அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்ற போது இனி விரைவில் கிரிக்கெட் வர்ணனை செய்வதில் ஈடுபடுவேன் என தெரிவித்திருந்தார்.

இருப்பினும் தற்போது ஓமன் நாட்டில் நடைபெற்று வரும் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட்டின் பிராண்ட் அம்பாசிடராக அவர் செயல்பட்டு வருகிறார். எனவே இந்தத் தொடரில் அவரால் வர்ணனை செய்ய முடியவில்லை என தெரிகிறது. மேலும் அடுத்ததாக நடைபெற உள்ள இலங்கை தொடருக்கும் அவர் திரும்ப மாட்டார் எனத்தெரிகிறது. இருப்பினும் வரும் ஐபிஎல் 2022 தொடருக்கு பின் இந்தியா பங்கேற்கும் அனைத்து போட்டிகளின்போது ரவி சாஸ்திரி வர்ணனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement