கேப்டன் விராட் கோலியின் வளர்ப்பில் நட்சத்திரமாக உருவெடுத்த 4 தரமான இளம் வீரர்கள் – லிஸ்ட் இதோ

- Advertisement -

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியது இந்திய ரசிகர்களை புரட்டிப் போட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற போது 7வது இடத்தில் இருந்த இந்தியாவை படிப்படியாக முன்னேற்றிய அவர் 2016 முதல் தற்போது வரை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக ஜொலிக்க வைத்தவர். 2017 முதல் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக இருந்த அவர் ஒரு ஐசிசி உலக கோப்பையை கூட வெல்லவில்லை என்ற காரணத்தால் விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்தார்.

kohli

- Advertisement -

மொத்தமாக விலகல்:
இதனால் முதலில் டி20 கேப்டன் பதவியில் இருந்து மட்டும் விலகிய அவரின் ஒருநாள் கேப்டன் பதவியை பிசிசிஐ வலுக்கட்டாயமாக பறித்தது. அதனால் விரக்தியடைந்ததன் காரணமாகவே டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகினார் என பரவலாக பேசப்படுகிறது. இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் என்பதையும் தாண்டி பல தரமான இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகளையும் ஆதரவையும் கொடுத்து இந்தியாவை தரமான அணியாக மாற்றியதிலும் விராட் கோலியின் பங்கு அதிகமாக இருந்தது.

கோலியின் 4 தரமான வளர்ப்பு:
தற்போதைய இந்திய அணியில் உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக வலம் வரும் விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், முஹம்மது ஷமி உள்ளிட்ட பல வீரர்கள் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியால் வளர்க்கப்பட்ட மாணவர்கள் என்பதே உண்மை. அந்த வகையில் கேப்டனாக விராட் கோலி வளர்த்த 4 தரமான வீரர்கள் பற்றி பார்ப்போம்:

siraj

4. முஹமது சிராஜ் : ஐபிஎல் 2020 தொடருக்கு முன் ரன்களை வாரி வழங்கி வந்த இளம் வீரர் முகமது சிராஜ் அடுத்த “அசோக் டிண்டா” என சமூக வலைதளங்களில் பலமுறை ரசிகர்களின் கிண்டலுக்கு உள்ளானார். ஆனாலும் அவருக்கு தொடர்ந்து பெங்களூரு அணியில் வாய்ப்பளித்த அப்போதைய கேப்டன் விராட் கோலி அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தார்.

- Advertisement -

அதன் காரணமாக உத்வேகமடைந்து அதன்பின் ஐபிஎல் தொடரில் அபாரமாக பந்துவீச துவங்கினார். அந்த சமயத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி போன்ற முன்னணி பவுலர்கள் காயமடைந்த காரணத்தால் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு தேடி வந்தது.

Siraj

அதை கச்சிதமாக பயன்படுத்திய சிராஜ் அந்த தொடரில் அபாரமாக பந்துவீசி இந்திய வேகப்பந்து வீச்சு கூட்டணியில் முக்கிய பவுலராக இடம் பிடித்தார். அதன்பின் கடந்த வருடம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் சரித்திர வெற்றிக்கு வித்திட்டு தற்போது இந்திய அணியின் முக்கிய தரமான பந்துவீச்சாளராக உருவெடுத்து விட்டார்.

- Advertisement -

3. ஜஸ்பிரித் பும்ரா : ஐபிஎல் தொடரில் சக்கை போடு போட்ட ஜஸ்பிரித் பும்ரா கடந்த 2016 ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையில் முதல் முறையாக இந்தியாவில் காலடி வைத்தார். ஆனாலும் 2017 முதல் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி தலைமையில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அதிகமாக விளையாடினார்.

Bumrah

உலகமறிந்த இவரின் திறமையை விராட் கோலியும் உணர அவருக்கு முழுமுதற் ஆதரவை கொடுக்க தொடங்கினார், குறிப்பாக வித்தியாசமான பவுலிங் ஆக்சனை கொண்ட இவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரிபட்டு வருவாரா? என்ற கேள்வி நிலவியபோது கடந்த 2018ஆம் ஆண்டு அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் முதல் முறையாக கோலி வாய்ப்பு கொடுத்தார்.

- Advertisement -

அப்போது முதல் விராட் கோலியின் தலைமையில் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளராக மேலும் மிளிர தொடங்கிய பும்ரா தற்போது இந்தியாவின் 3 வகையான கிரிக்கெட் அணியிலும் முதல் பந்து வீச்சாளராக வலம் வருகிறார்.

pant

2. ரிஷப் பண்ட்: தோனி எனும் மகத்தான ஜாம்பவானுக்குப் பின் ஒரு சிறப்பான விக்கெட் கீப்பர் இல்லாமல் இந்தியா இருந்தபோது அந்த இடத்திற்கு வந்தவர்தான் ரிஷப் பண்ட். இவர் இந்தியாவின் 3 வகையான கிரிக்கெட்டிலும் விராட் கோலி தலைமையில் அறிமுகமானாவர். ஆரம்ப காலகட்டத்தில் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பியதால் மிகவும் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். ஆனால் அந்த மோசமான தருணங்களிலும் அவருக்கு விராட் கோலி தொடர்ந்து அளித்து வந்தார்.

அதை பயன்படுத்தி தோல்விகளில் பாடங்களை கற்று தற்போது ஒரு மணி நேரம் விளையாடினால் போட்டியை மாற்றக்கூடிய உலகத்தரம் வாய்ந்த விக்கெட் கீப்பராக உருவாகி இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார் என்றால் மிகையாகாது.

Rahul

1. கேஎல் ராகுல் : இன்று இந்தியாவின் அடுத்த கேப்டன் என்று பலராலும் பேசப்படும் கேஎல் ராகுல் கடந்த 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட், 2016ஆம் ஆண்டு ஒருநாள் – டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் முன்னாள் கேப்டன் தோனியின் கீழ் இந்தியாவிற்காக விளையாட தொடங்கியவர்.

ஆரம்ப காலகட்டத்தில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து அருமையான தொடக்கத்தை பெற்றபோதிலும் அடுத்த ஒரு சில வருடங்களில் மோசமான பேட்டிங் காரணமாக இந்திய அணியில் ஒரு நிரந்தரமான இடத்தை தக்கவைக்க தடுமாறினார். இருப்பினும் இவரின் திறமையை அறிந்த விராட் கோலி அணியில் ஒரு சில வீரர்கள் காயம் காரணமாக விலகிய போது இவருக்கு வாய்ப்பை வழங்கி அதிக ஆதரவு கொடுத்தார்.

இதையும் படிங்க : இந்த 3 CSK வீரர்களையும் ஒன்னா விளையாட வச்சா இந்தியாவுக்கு தான் 2023 வேர்ல்டு கப்பு – ஜாஹீர் கான்

அந்த ஆதரவுடன் தனது முழு திறமையை கிடைத்த பயன்படுத்திய கேஎல் ராகுல் அதன்பின் ரன்களை குவித்து இந்தியாவின் பல வெற்றிகளுக்கு வித்திட்டார். தற்போது இந்திய அணியில் இருந்து விராட் கோலி விலகி நிற்கும் இந்த வேளையில் இந்தியாவின் அடுத்த கேப்டன் என்று பேசும் அளவுக்கு கேஎல் ராகுல் உலகத்தரம் வாய்ந்த ஒரு வீரராக அவதரித்துள்ளார்.

Advertisement