இந்த 3 CSK வீரர்களையும் ஒன்னா விளையாட வச்சா இந்தியாவுக்கு தான் 2023 வேர்ல்டு கப்பு – ஜாஹீர் கான்

Zaheer
- Advertisement -

சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இந்தியா படுதோல்விகளை சந்தித்து மண்ணைக்கவ்வியது. குறிப்பாக கேஎல் ராகுல் தலைமையில் இந்தியா விளையாடிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு வெற்றியை கூட பெற முடியாமல் ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்தது. தரமான வீரர்கள் இருந்தபோதிலும் அனுபவமில்லாத தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு போட்டியை கூட வெல்ல முடியாமல் போனது இந்திய ரசிகர்களை பெரும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.

kohli 1

- Advertisement -

மோசமான மிடில் ஆர்டர் :
இந்த தொடரில் விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் போன்ற அனுபவ டாப் ஆர்டர் வீரர்கள் நிதானத்துடன் பேட்டிங் செய்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஆனாலும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய வீரர்கள் அதை பயன்படுத்த தவறியதன் காரணமாக இந்தியாவின் வெற்றி கைநழுவி போனது. இந்தியா படுதோல்வி அடைந்த அந்த 3 போட்டிகளிலும் லோயர் மிடில் ஆர்டரில் விளையாடிய ஷர்துல் தாகூர் மற்றும் தீபக் சஹர் ஆகியோர் கடைசி வரை நின்று முழு மூச்சுடன் இந்தியாவின் வெற்றிக்காக போராடினார்கள்.

குறிப்பாக முதல் 2 போட்டிகளில் கடைசி நேரத்தில் களமிறங்கிய ஷார்துல் தாக்கூர் மிகவும் குறைவான பந்துகளை சந்தித்து முதல் போட்டியில் 50* ரன்களும் 2வது போட்டியில் 40* ரன்களும் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இந்தியாவின் வெற்றிக்கு போராடினார். அதேபோல 3வது போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கிய தீபக் சாஹர் வெறும் 34 பந்துகளில் சந்தித்து 54 ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றியின் விளிம்பு வரை அழைத்து சென்ற போதிலும் இந்தியா வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

deepak 2

பாராட்டிய ஜாஹீர் கான்:
இந்தியா தோற்றாலும் கடைசி நேரத்தில் இவர்களின் அபார பேட்டிங் பலரின் பாராட்டையும் பெற்றது. இந்நிலையில் இந்த இருவருக்கும் இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் என இந்தியாவின் முன்னாள் வீரர் ஜாஹீர் கான் கேட்டுக்கொண்டுள்ளார். இது பற்று க்ரிக்பஸ் இணையத்தில் அவர்,

- Advertisement -

“வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தீபக் சாஹர் அபாரமாக பேட்டிங் செய்து அதுவும் அதிகப்படியான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் ரன்கள் குவித்துள்ளார். அந்த போட்டியில் அவர் 2 ரன்கள் தொடர்ச்சியாக எடுத்தது பாராட்டுக்குரியது. அவர் அந்த போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேட்டிங் செய்தார். அவர் அந்த இன்னிங்சை திட்டமிட்டு விளையாடினார். இதற்கு முன்பும் அவரின் பேட்டிங்கை பார்த்துள்ளோம். அவர் இது போல ஒரு முறை மட்டும் விளையாடவில்லை, மீண்டும் சிறப்பாக விளையாடி உள்ளார்.

Thakur

ஷார்துல் தாகூரும் மிகுந்த பாராட்டுக்கு உரியவர். அவரும் அபாரமாக பேட்டிங் செய்தார்” என தெரிவித்த அவர் ஷார்துல் தாகூர் மற்றும் தீபக் சஹர் ஆகியோரை மனதார பாராட்டி உள்ளார். கடந்த 2021ஆம் இலங்கையில் நடந்த அந்த அணிக்கு எதிரான ஒரு போட்டியில் இதேபோல இந்தியா தடுமாறியபோது தனி ஒருவனாக கடைசி வரை பேட்டிங் செய்த தீபக் சாஹர் 69* ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றி பெற செய்தார்.

- Advertisement -

3 சென்னை சிங்கங்கள்:
“இவர்கள் இருவரும் சேர்ந்து விளையாடினால் அது இந்தியாவிற்கு நன்மையாகும். ஏனெனில் தற்போது நாம் 6வது பந்துவீச்சாளரை தேடிக்கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட வேளையில் ரவீந்திர ஜடேஜா அணிக்கு திரும்பினால் அவர் 6வது இடத்தில் பேட்டிங் செய்வார். அதன் அடிப்படையில் இவர்கள் இருவரும் ஒன்றாக விளையாட வாய்ப்பு அளிக்க வேண்டும். வருங்காலத்தில் இந்தியா மிகப்பெரிய தொடரில் விளையாட உள்ளது. எனவே இவர்கள் இருவருக்கும் சேர்ந்தாற்போல் வாய்ப்பளித்து பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஏனெனில் இருவரும் அபாரமாக விளையாடி வருகிறார்கள்”

Jadeja

என இது பற்றி மேலும் தெரிவித்த ஜாஹீர் கான் தற்போது காயத்தில் இருக்கும் ரவீந்திர ஜடேஜா அணிக்கு திரும்பினால் அவர் 6வது இடத்தில் பேட்டிங் செய்வார். அந்த சமயத்தில் 7, 8 ஆகிய இடங்களில் தீபக் சஹர், ஷார்துல் தாகூர் ஆகியோருக்கு ஒன்றாக விளையாட வாய்ப்பளித்தால் இந்தியாவின் லோயர் மிடில் ஆர்டர் வலுப்பெறுவதுடன் அது வருங்காலத்தில் 2023 உலகக்கோப்பை போன்ற மிகப்பெரிய தொடர்களில் இந்தியா விளையாடும் போது மிகப்பெரிய நன்மையை செய்யும் என சூப்பர் ஆலோசனையை ஜாகீர் கான் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : பாகிஸ்தான் கிரிக்கெட் மைதானத்தில் திடீரென பற்றிய தீ. கலக்கத்தில் ஆஸி வீரர்கள் – என்ன நடந்தது?

ஜாஹீர் கான் கூறும் இந்த 3 வீரர்களும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அபாரமாக விளையாடி பின்னர் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement