பாகிஸ்தான் கிரிக்கெட் மைதானத்தில் திடீரென பற்றிய தீ. கலக்கத்தில் ஆஸி வீரர்கள் – என்ன நடந்தது?

Karachi
- Advertisement -

இந்தியாவை பார்த்து ஐபிஎல் தொடருக்கு போட்டியாக பாகிஸ்தான் நடத்திவரும் “பாகிஸ்தான் சூப்பர் லீக்” டி20 கிரிக்கெட் தொடரின் 7வது சீசன் ஜனவரி 27ஆம் தேதியன்று துவங்கியது. இந்த தொடரில் முன்னணி பாகிஸ்தான் வீரர்களுடன் பல வெளிநாட்டு வீரர்களும் கலந்துக்கொள்ள உள்ளதால் அந்நாட்டு ரசிகர்கள் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இப்படிப்பட்ட முக்கியமான நேரத்தில் இந்த தொடர் நடைபெறும் மைதானங்களில் ஒன்றான பாகிஸ்தானின் கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் திடீரென்று சில தினங்களுக்கு முன் தீ பற்றி எரிந்தது.

psl

- Advertisement -

திடீர் தீ :
அந்நாட்டின் கராச்சி நகரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் மைதானத்தில் வர்ணனை செய்யும் அறையில் தீ பற்றியதாக தெரிகிறது. திடீரென பற்றி எரிந்த நெருப்பானது அருகிலுள்ள இடங்களுக்கும் மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. இதை அந்த பகுதியிலிருந்து கிரிக்கெட் ரசிகர்கள் வீடியோவாக படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் இந்த செய்தி வைரலானது. இதையடுத்து அந்த நெருப்பு அணைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிகிறது.

முக்கியான நேரத்தில் :
இந்த சம்பவத்திற்கு பின் கராச்சி மைதானத்தின் 3வது மாடியில் இருந்த வர்ணனையாளர்கள் அறை தற்போது கீழ் தளத்திற்கு மாற்றப்பட்டதாக தெரியவருகிறது. பிஎஸ்எல் நடைபெறவிருக்கும் இந்த நேரத்தில் பாகிஸ்தானின் முக்கிய மைதானத்தில் நிகழ்ந்த இந்த நிகழ்வு அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தை கலக்கம் அடைய செய்துள்ளது.

Karachi 1

ஏனெனில் இந்த மைதானம் பிஎஸ்எல் தொடரில் விளையாடி வரும் கராச்சி கிங்ஸ் அணியின் சொந்த மைதானமாகும். அத்துடன் இந்த மைதானத்தில் பிஎஸ்எல் தொடரின் 7வது சீசனின் முதல் 15 போட்டிகள் இந்த மைதானத்தில்தான் நடைபெற உள்ளது. குறிப்பாக முதல் போட்டியில் கராச்சி கிங்ஸ் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.

- Advertisement -

கலக்கத்தில் ஆஸ்திரேலியா:
கடந்த 1998க்கு பின் முதல் முறையாக வரும் மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. ஆனால் சமீபத்தில் பாகிஸ்தானில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலால் அந்நாட்டிற்கு சென்று விளையாட ஆஸ்திரேலிய வீரர்கள் தயங்குவதாக நேற்று ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ஒரு நாளிதழில் செய்திகள் வெளியாகின.

இதையும் படிங்க : எனக்கு தோனிதான் ரோல்மாடல். அவருக்கு கீழ் சி.எஸ்.கே வில் விளையாட ஆசை – ஆர்.சி.பி வீரர் விருப்பம்

குறிப்பாக அந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இந்த கராச்சி நேஷனல் கிரிக்கெட் மைதானத்தில் வரும் மார்ச் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. அப்படிபட்ட வேளையில் அந்த கிரிக்கெட் மைதானத்தில் இப்படிப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை மேலும் கலக்கமடைய செய்துள்ளது.

Advertisement