எனக்கு தோனிதான் ரோல்மாடல். அவருக்கு கீழ் சி.எஸ்.கே வில் விளையாட ஆசை – ஆர்.சி.பி வீரர் விருப்பம்

RCB
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது. இந்த வருடம் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய புதிய 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டதன் காரணமாக இந்த ஏலம் மெகா அளவில் நடைபெற உள்ளது. இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், முகமத் சிராஜ் ஆகிய 3 வீரர்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் தக்க வைத்துள்ளது.

விடுவிக்கப்பட்ட ஹர்ஷல் படேல்:
இருப்பினும் கடந்த சீசனில் அபாரமாக பந்துவீசிய ஹர்ஷல் படேலை அந்த அணி நிர்வாகம் தக்கவைக்காமல் விடுவித்துள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் கடந்த 2021 ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்ட அவர் 32 விக்கெட்களை எடுத்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்று அசத்தினார்.

- Advertisement -

குறிப்பாக வலுவான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்களை எடுத்த முதல் பந்து வீச்சாளர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் பந்து வீச்சாளர் போன்ற சாதனைகளை படைத்தார். அத்துடன் இந்த 32 விக்கெட்களின் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர் என்ற டுவைன் ப்ராவோவின் வரலாற்று சாதனையையும் சமன் செய்தார்.

சென்னையில் விளையாட விருப்பம்:
இந்நிலையில் வரும் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட விரும்புவதாக ஹர்ஷல் பட்டேல் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், “ஏல தொகையை நிர்வகிப்பதற்காக நீ பெங்களூரு அணியில் தக்கவைக்க வில்லை என பயிற்சியாளர் மைக் ஹெசன் என்னிடம் தெரிவித்தார். அவர்கள் என்னை பெங்களூர் அணியில் விளையாடுவதற்கு மிகவும் விரும்பினார்கள்.

- Advertisement -

நானும் பெங்களூர் அணியில் விளையாட மிகவும் விரும்பினேன். ஏனெனில் பெங்களூரு அணிக்காக 2021 சீசனில் விளையாடியதால் தான் எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுமையாக மாறியது. அத்துடன் எங்கள் அணிக்கு வாருங்கள் என என்னை இதுவரை எந்த அணியும் கூப்பிடவில்லை” என தெரிவித்துள்ள அவர் பெங்களூர் கிரிக்கெட் அணி தனது கிரிக்கெட் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி அமைத்தது என கூறினார்.

இதையும் படிங்க : ஹேக் செய்யப்பட்ட இந்திய வீரரின் ட்விட்டர் கணக்கு. 10 தாறுமாறான பதிவு – வெளியாகி அதிர்ச்சி

தோனி ரோல் மாடல்:
“எம்எஸ் தோனி எனது கிரிக்கெட் ரோல் மாடல். அவர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த கேப்டன். பெங்களூரு அணியில் இல்லாமல் போனால் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட விரும்புகிறேன்” என இது பற்றி மேலும் தெரிவித்துள்ள ஹர்ஷல் படேல் ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடாமல் போனால் தனது கிரிக்கெட் ரோல் மாடலாக விளங்கும் எம்எஸ் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

Advertisement