
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த டி20 தொடரின் முதலாவது போட்டி இன்று கொல்கத்தா மைதானத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் துவங்கியது.
இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதுகின்றன. சற்று நேரத்திற்கு முன்னர் நடைபெற்று முடிந்த டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் இந்திய அணி பந்து வீசும் என்று தீர்மானம் செய்தார்.
அதன்படி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில் இந்த போட்டியிலும் துவக்க வீரராக இஷான் கிஷன் தான் ரோகித் சர்மாவுடன் களமிறங்குகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனால் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காமல் போயுள்ளது. அதோடு தீபக் சாஹர் பிளேயிங் லெவனில் இருப்பதால் ஷர்துல் தாகூருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. மேலும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் இந்த போட்டியில் இடம்பெற வில்லை. அவருக்கு பதிலாக இளம் சுழற்பந்து வீச்சாளரான ரவி பிஷ்னோய் அறிமுக வீரராக இன்று களமிறங்கியுள்ளார்.
(21)இருபத்தி ஒரு வயது மட்டுமே நிரம்பிய ரவி பிஷ்னோய் அண்டர் 19 இந்திய அணியில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அனைவராலும் பாராட்டப் பெற்ற அவர் அதுமட்டுமின்றி கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் 23 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்திய அணிக்கு இவர் பாரமாக மாறிவிட்டார் ! ட்விட்டரில் வெடித்த மெகா சண்டை – என்ன நடந்தது?
இந்நிலையில் 21 வயது மட்டுமே நிரம்பிய அவரை அணியில் தேர்வு செய்தது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. இன்றைய முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ : 1) ரோஹித் சர்மா, 2) இஷான் கிஷன், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) ரிஷப் பண்ட், 6) வெங்கடேஷ் ஐயர், 7) தீபக் சாகர், 8) புவனேஷ்வர் குமார், 9) ஹர்ஷல் படேல், 10) யுஸ்வேந்திர சாஹல், 11) ரவி பிஷ்னோய் (அறிமுகம்).