இந்திய அணிக்கு இவர் பாரமாக மாறிவிட்டார் ! ட்விட்டரில் வெடித்த மெகா சண்டை – என்ன நடந்தது?

IND-Womens
- Advertisement -

நியூஸிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 1 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று வருகிறது. இதில் முதலில் நடந்த டி20 போட்டியில் பரிதாப தோல்வி அடைந்த இந்தியா அதன்பின் துவங்கி நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. நியூஸிலாந்தின் குயின்ஸ் டவுன் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்தியா நேற்று நடைபெற்ற 2வது போட்டியிலும் 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.

indianwomescricket

- Advertisement -

நேற்று நடந்த 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 270/6 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் மிதாலி ராஜ் 66* ரன்களும் தொடக்க வீராங்கனை மேக்னா 49 ரன்களும் ரிச்சா கோஷ் 65 ரன்களும் குவித்தார்கள். நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோபி டேவின் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

சொதப்பும் இந்திய மகளிர் அணி:
இதை அடுத்து 271 என்ற இலக்கை துரத்திய நியூசிலாந்துக்கு அந்த அணி வீராங்கனை எமிலியா கெர் 135 பந்துகளில் சதமடித்து 119* ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த வெற்றி பெறச் செய்தார். இதன் காரணமாக 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2 – 0* என முன்னிலை பெற்றுள்ளது. வரும் மார்ச் மாதம் இதே நியூசிலாந்து மண்ணில் ஐசிசி மகளிர் உலககோப்பை 2022 தொடர் நடைபெற உள்ள நிலையில் அதற்கு தயாராகும் வண்ணம் பங்கு பெற்று வரும் இந்த தொடரில் இந்திய மகளிர் அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருவது இந்திய ரசிகர்களுக்கு கவலையை கொடுத்துள்ளது.

inianwomescrick

இந்நிலையில் தற்போது 39 வயதாகும் அனுபவ இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் இந்த தொடர் மட்டுமல்லாது விரைவில் நடைபெற உள்ள மகளிர் உலகக் கோப்பையிலும் கடைசி முறையாக இந்தியாவிற்கு கேப்டனாக செயல்பட உள்ளார். கடந்த 1999ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் கடந்த 24 வருடங்களாக மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆணிவேராக விளையாடி வருகிறார்.

- Advertisement -

பாரமாக மித்தாலி ராஜ்:
சொல்லப்போனால் மகளிர் கிரிக்கெட்டில் பல வரலாற்றுச் சாதனைகளை படைத்துள்ள அவரை “லேடி சச்சின் டெண்டுல்கர்” என இந்திய ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறார். அந்த வேளையில் நியூசிலாந்துக்கு எதிரான இந்த தொடரில் அவர் இதுவரை நடந்த 2 போட்டிகளில் 66* (81), 59 (73) என அடுத்தடுத்த அரை சதங்கள் அடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் பங்கேற்ற கடைசி 9 ஒருநாள் போட்டிகளில் 7 அரை சதங்களை அடித்து 39 வயதிலும் தம்மால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் சமீபகாலங்களாக அவர் மெதுவாக விளையாடி வருவதை சுட்டிக் காட்டிய இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை மற்றும் வர்ணனையாளர் “இஸபெல்லே வெஸ்ட்புரி” இந்திய கிரிக்கெட்டுக்கு மிதாலி ராஜ் பாரமாக மாறிவிட்டதாக தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

Mithali

இது பற்றி தனது டுவிட்டரில் அவர் “தற்போது இந்திய கிரிக்கெட்டில் மிதாலி ராஜ் சிறந்தவராகவும் அதே சமயம் மோசமானவராகவும் உள்ளார்” என கூறினார். அதனால் பொங்கி எழுந்த இந்திய வீராங்கனை விஆர் வனிதா “இந்திய கிரிக்கெட் பற்றி கவலைப் படுவதை விட்டுவிட்டு இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு தேவையான நல்லதை செய்ய முயற்சி செய்யுங்கள். ஏனெனில் சமீபத்தில் அவர்கள் ஆஸ்திரேலியர்களால் மோசமாக தோற்கடிக்கப்பட்டார்கள்” என பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

வெடித்த சண்டை:
அதற்கு பதிலளித்த வெஸ்ட்புரி “கூல் கூல், இதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. மகளிர் கிரிக்கெட்டில் விளையாடியவர்களில் மித்தாலி ஒரு மிகச்சிறந்த ஒருவர். ஆனால் இந்திய கிரிக்கெட்டின் முன்னேற்றத்தில் அவரின் பங்கு பொருந்தவில்லை. எனவே நான் கூறிய அந்தக் கருத்து சரியானதல்லவா. மேலும் ஆம் இங்கிலாந்து கிரிக்கெட் பற்றி நான் கவலைப்படுகிறேன். அதைப்பற்றிய சமீபத்திய ஒரு கட்டுரையில் நான் குறிப்பிட்டிருந்தேன்” ஒரு கட்டுரையை சுட்டிக்காட்டி பதிலளித்திருந்தார். ஆனாலும் அதற்கு இந்திய வீராங்கனை வனிதா “உங்களின் கட்டுரையைப் பார்த்தேன், அதில் நீங்கள் எந்த ஒரு வீராங்கனையின் பெயரையும் குறிப்பிடவில்லை. ஆகவே இங்கிலாந்து கிரிக்கெட் என்றால் ஒரு நியாயம், இந்திய கிரிக்கெட் என்றால் ஒரு நியாயமா. இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சியை இந்தியரின் கையில் விட்டு விடுங்கள்” என பின் வாங்காமல் தக்க பதிலடி கொடுத்தார். இருப்பினும் அவருக்கு கடைசி வரை சமாதானமாக வெஸ்ட்புரி மிதாலி ராஜ் பற்றிய தனது கருத்தை நியாயம் என கடைசி வரை ட்வீட்டரில் பேசிக் கொண்டிருந்தார்.

Mithali Raj VR Vanitha Isabelle Westbury

இறுதி வரை விட்டுக்கொடுக்காத வனிதா இறுதியில் “மன்னிக்கவும், நீங்கள் எத்தனை சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளீர்கள். உங்களின் புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் பார்க்க முடியவில்லை. இந்தியா என்ன செய்ய வேண்டும் என்ற அதிகாரம் செய்யக்கூடிய மனநிலையிலிருந்து இன்னும் நீங்கள் வெளியே வரவில்லை போல. முதலில் உங்களை ஒன்றாக இணைத்து கொள்ளுங்கள் ஆங்கிலேயரே” என மாஸ் பதிலடி கொடுத்தார்.

மித்தாலி என்ன செய்வார்:
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் வரலாற்றில் இதுவரை ஒருமுறை கூட உலக கோப்பையை வென்றது கிடையாது. ஆடவர் கிரிக்கெட் போல இந்திய மகளிர் கிரிக்கெட் இன்னும் முழுமையான முன்னேற்றம் அடையாமல் இருக்கிறது என்பது உண்மைதான் என்றாலும் அதற்காக மிதாலி ராஜை குறை கூறுவதற்கு எதுவுமே இல்லை.

Mithali 2

ஏனெனில் கிரிக்கெட்டில் வெற்றி பெற அதில் விளையாடும் 11 வீரர்களும் பங்காற்ற வேண்டும் என கூறுவார்கள். ஆனால் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் இன்னும் கூட ஒரு சில மேட்ச் வின்னர்கள் மட்டுமே உள்ளார்கள் என்பதாலேயே உலக அரங்கில் இன்னும் இந்திய மகளிர் அணியால் சாதிக்க முடியவில்லை என்பதே உண்மையாகும். அதற்காக கடந்த 20 வருடங்களாக இந்திய கிரிக்கெட் அணியில் முழுமூச்சுடன் விளையாடி வரும் மிதாலி ராஜ் குறை கூறுவது எந்த வகையிலும் நியாயமில்லை என்பதை இங்கிலாந்தின் இஸபெல்லே வெஸ்ட்புரி புரிந்து கொள்ள வேண்டும்.

Advertisement