INDvsSL : இந்திய நேரப்படி இந்திய இலங்கை போட்டிகள் எத்தனை மணிக்கு துவங்கும் – எந்த சேனலில் பார்க்கலாம்?

INDvsSL
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நாளை முதல் துவங்க இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற உள்ளது. இந்தியாவில் பெருகிவரும் கொரோனா அச்சம் காரணமாக முதலாவது போட்டி லக்னோவிலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டிகள் தர்மசாலாவிலும் நடைபெறும் என்று ஏற்கனவே பிசிசிஐ அறிவித்து அதற்கான அதிகாரபூர்வ அட்டவணையும் வெளியிட்டது.

indvssl

- Advertisement -

மேலும் இந்த தொடருக்கான இந்திய அணியும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதால் இந்திய அணி வீரர்கள் தற்போது லக்னோ மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது எத்தனை மணிக்கு துவங்கும்? எந்த சேனலில் பார்க்கலாம் என்பது போன்ற தகவல்களை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

அதன்படி இந்த தொடரின் முதலாவது போட்டி நாளை பிப்ரவரி 24-ஆம் தேதி லக்னோ மைதானத்திலும், அதனை தொடர்ந்து 26-ஆம் தேதி 2வது டி20 போட்டி, 27-ஆம் தேதி 3-வது போட்டியும் தர்மசாலா மைதானத்தில் நடைபெற இருக்கின்றன.

Ground-Dharamsala

இந்த மூன்று போட்டிகலுமே இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு இந்த போட்டிகளை ரசிகர்கள் நேரலையாக ஸ்டார்ஸ் போர்ட்ஸ் குழும தொலைக்காட்சிகளில் கண்டு ரசிக்கலாம். அதேபோன்று மொபைல் போனில் ஹாட் ஸ்டார் பிளஸ் டிஸ்னி ஆப்பிலும் நீங்கள் இந்த போட்டிகளை காணலாம் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

- Advertisement -

ஏற்கனவே கடந்த ஆண்டு ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அந்நாட்டு அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆனால் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் அவர்களிடம் இழந்தது. அதனை தொடர்ந்து தற்போது அந்த டி20 தொடரின் தோல்விக்கு பழிவாங்க காத்திருக்கிறது.

இதையும் படிங்க : இப்படி நல்லா ஆடிட்டு வெளிய போயிட்டாரே. நட்சத்திர வீரரின் வெளியேற்றத்தால் – கவலையில் ரசிகர்கள்

அதுமட்டுமின்றி அண்மையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணியானது அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 க்கு 1 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததால் அவர்கள் சற்று பலம் இழந்த அணியாகவே காணப்படுகிறார்கள் என்று கூறலாம்.

Advertisement