இப்படி நல்லா ஆடிட்டு வெளிய போயிட்டாரே. நட்சத்திர வீரரின் வெளியேற்றத்தால் – கவலையில் ரசிகர்கள்

SKY
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது கொல்கத்தா மைதானத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்தது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணியானது வெஸ்ட் இண்டீஸ் அணியை வொயிட் வாஷ் செய்து அபார வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி ஆறு வருடங்களுக்கு பிறகு 20 கிரிக்கெட்டின் தரவரிசை பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றது.

indvswi

- Advertisement -

இதனை அடுத்து இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணியானது இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை ஏற்கனவே பிசிசிஐ அறிவித்த நிலையில் அதில் சில முக்கிய வீரர்கள் பங்கேற்க முடியாமல் போனது.

ஏற்கனவே காயம் காரணமாக கேஎல் ராகுல், அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் வெளியேறிய நிலையில் ரிஷப் பண்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு தேவைப்படுவதால் இந்த தொடரில் இருந்து விலகினார்கள். அதற்கடுத்து வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரும் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ அதிகாரபூர்வமான ஒரு கருத்தை வெளியிட்டது.

sky

இவ்வேளையில் தற்போது அணியின் முன்னணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக சூரியகுமார் யாதவும் இந்த இலங்கை தொடரை தவற விடுகிறார் என்ற தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரின் போது இந்திய அணியை ஒவ்வொரு போட்டியிலும் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் வெற்றிக்கு அழைத்துச் சென்ற சூர்யகுமார் யாதவ் தொடர்நாயகன் விருதையும் தட்டிச் சென்று இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் அந்த தொடரில் பீல்டிங் செய்யும் போது ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது சூரியகுமார் யாதவும் அதிகாரபூர்வமாக இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருக்கிறார்கள் என்றே கூறலாம்.

இதையும் படிங்க : இலங்கை அணிக்கெதிரான தொடரில் இருந்து மேலும் 2 வீரர்கள் வெளியேற்றம் – பி.சி.சி.ஐ அறிவிப்பு

ஏனெனில் இந்திய அணி சறுக்கலை சந்திக்கும் போதெல்லாம் மிடில் ஆர்டரில் ஒரு தூணாக நின்று தனது அதிரடியால் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற அவரை போன்ற ஒரு பலமான வீரர் இந்த தொடரில் இருந்து வெளியேறியது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவு என்றே கூறலாம். ஆனாலும் அணியின் மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் இருப்பதனால் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் சூர்யகுமார் யாதவ் வெளியேற்றத்தை நினைத்து ரசிகர்கள் வருத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement