ஆசியக்கோப்பை : குல்தீப் யாதவுக்கு சேன்ஸ் குடுத்தது ஓகே.. ஆனா இவருக்கு ஏன் சேன்ஸ் தரல – ரசிகர்கள் கோபம்

Asia-Cup
- Advertisement -

அஜித் அகார்கர் தலைமையிலான தேர்வுத்குழு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருடன் நடைபெற்ற மீட்டிங்கிற்கு பிறகு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய வீரர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. இந்த ஆசிய கோப்பை தொடரில் இடம் பெற்றுள்ள வீரர்களே பெரும்பாலும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான அணியிலும் இடம்பிடிப்பார்கள் என்பதனால் இந்த அணித்தேர்வு மீது அனைவரது பார்வையும் இருந்தது.

Asia-Cup

- Advertisement -

இந்நிலையில் வெளியான இந்த ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் காயத்தில் இருந்த சில வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பிருந்தனர். அதேபோன்று இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு முன்னுரிமை கொடுத்தும் அணியின் தேர்வு அமைந்திருந்தது.

ஆனால் நன்றாக செயல்பட்ட சில வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது அனைவரது மத்தியிலும் தற்போது விவாதிக்கப்படும் விடயமாக மாறியுள்ளது. அந்த வகையில் இந்திய அணியில் குல்தீப் யாதவ் இடம் பிடித்திருந்தாலும் யுஸ்வேந்திர சாஹல் இடம் பிடிக்காதது ரசிகர்கள் மத்தியில் கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Yuzvendra-Chahal

ஏனெனில் தற்போதைய இந்திய அணியில் ஜடேஜா, அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் என இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வலதுகை சுழற்பந்து வீச்சாளரும், விக்கெட் டேக்கருமான சாஹலை ஏன் தேர்வு செய்யவில்லை? அவரை அணியில் சேர்த்து இருக்கலாம் என்று ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் குல்தீப்பை விட கூடுதல் அனுபவம் கொண்ட அவருக்கு அணியில் வாய்ப்பு தர மறுக்கப்பட்டது குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் முழு வீரர்கள் லிஸ்ட் இதோ :

இதையும் படிங்க : ஆசிய கோப்பை 2023 : வாய்ப்பே இல்லாமல் இருந்தும் அதிர்ஷ்டத்தால் இந்திய அணியால் தேர்வாகியுள்ள 3 நட்சத்திர வீரர்கள்

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) சூரியகுமார் யாதவ், 7) திலக் வர்மா, 8) இஷான் கிஷன், 9) ஹார்டிக் பாண்டியா, 10) ரவீந்திர ஜடேஜா, 11) ஷர்துல் தாகூர், 12) அக்சர் படேல், 13) குல்தீப் யாதவ், 14) பும்ரா, 15) முஹமது ஷமி, 16) முகமது சிராஜ், 17) பிரசித் கிருஷ்ணா.

Advertisement