ஆசிய கோப்பை 2023 : வாய்ப்பே இல்லாமல் இருந்தும் அதிர்ஷ்டத்தால் இந்திய அணியால் தேர்வாகியுள்ள 3 நட்சத்திர வீரர்கள்

Asia Cup INDIA
- Advertisement -

ஆசிய கண்டத்தின் சாம்பியனை தீர்மானிக்க உதவும் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் ஒருநாள் போட்டிகளாக நடைபெறும் இத்தொடரில் அனைத்து நாடுகளும் உலகக்கோப்பையில் களமிறங்கப் போகும் தங்களுடைய இறுதிக்கட்ட வீரர்களை தேர்ந்தெடுக்க ஆயத்தமாகியுள்ளன. இந்த தொடரில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணியில் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து கம்பேக் கொடுத்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

INDvsPAK

- Advertisement -

இருப்பினும் இந்த அணியில் இடமில்லாத காரணத்தால் அல்லது சுமாராக செயல்பட்ட காரணத்தால் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டும் அதிர்ஷ்டத்தால் தேர்வாகியுள்ள சில வீரர்களை பற்றி பார்ப்போம்:

1. திலக் வர்மா: ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2 வருடங்களாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் மிடில் ஆர்டரில் அதிரடியாக செயல்பட்ட காரணத்தால் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் அறிமுகமாகி சவாலான மைதானங்களில் இதர வீரர்கள் தடுமாறிய போது அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இந்தியாவின் வெற்றிக்காக போராடினார். இருப்பினும் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகாத அவர் 2023 உலகக்கோப்பையில் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் தேவை என்ற ஒரே அதிர்ஷ்டமான காரணத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Tilak-Varma

குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 20 வயதிலேயே நல்ல முதிர்ச்சியான செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 55க்கும் மேற்பட்ட சராசரியை கொண்டிருப்பதால் நம்பி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் டி20 கிரிக்கெட்டுக்கும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்ற நிலைமையில் உள்ளூர் அளவில் அசத்திய பல வீரர்கள் சர்வதேச அளவில் தடுமாறிய கதைகள் ஏராளம். எனவே தனது தேர்வை நியாயப்படுத்தும் வகையில் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டிய சூழ்நிலையில் அவர் விளையாட உள்ளார்.

- Advertisement -

2. சூரியகுமார் யாதவ்: தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் டி20 கிரிக்கெட்டில் பெரும்பாலான போட்டிகளில் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி எப்படி பந்து வீசினாலும் அடித்து நொறுக்கி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறியுள்ள இவர் சற்று நிதானமாக விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே திண்டாடி வருகிறார்.

குறிப்பாக கடந்த பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டான முதல் வீரர் என்ற மோசமான உலக சாதனையை படைத்த அவர் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடர் உட்பட ஒருநாள் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வரமாட்டேன் என்பதை பலமுறை நிரூபித்துள்ளார். சொல்லப்போனால் ஒருநாள் கிரிக்கெட்டில் தம்முடைய செயல்பாடுகள் தமக்கே திருப்தியளிக்கவில்லை என்று தெரிவித்திருந்த அவர் டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக இந்த ஆசிய கோப்பையில் அதிர்ஷ்டத்தால் தேர்வாகியுள்ளார்.

- Advertisement -

3. முகமது ஷமி: 2015 – 2019 காலகட்டங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் முதன்மை பவுலராக இருந்த இவர் சமீப காலங்களாகவே டி20 கிரிக்கெட்டில் தடுமாற்றமாக செயல்பட்டு ரன்களை வாரி வழங்கி வருகிறார். குறிப்பாக 2021, 2022 டி20 உலக கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் தடுமாறியதால் டி20 அணியில் மொத்தமாக கழற்றி விடப்பட்டுள்ள அவர் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் சுமாராகவே பந்து வீசினார்.

axar Patel Virat Kohli Mohammed Shami

இதையும் படிங்க:ஆசிய கோப்பைன்னா இளக்காரமா, ஃபிட்டாக இல்லாத அவர ஏன் செலக்ட் பண்ணீங்க? – அஜித் அகர்கரை விளாசிய ஸ்ரீகாந்த்

அதே போல ஒருநாள் கிரிக்கெட்டிலும் 2019 உலக கோப்பைக்கு பின் 29.25, 32.75, 30.00 என கடந்த 3 வருடங்களாக சுமாரான சராசரியிலேயே பந்து வீசி வரும் அவருக்கு போட்டியாக முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா போன்ற நிறைய இளம் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு நிலையான இடத்தையும் பிடித்துள்ளனர். அதன் காரணமாக சமீப காலங்களாகவே தொடர்ந்து அசத்த முடியாமல் தடுமாறும் அவருக்கு இந்த ஆசிய கோப்பையில் இடம் கிடைக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அனுபவத்தை கொண்டுள்ள ஒரே காரணத்தால் அவருக்கு கடைசி வாய்ப்பாக இந்த ஆசிய கோப்பையுடன் உலக கோப்பையிலும் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement