35 வயசுலயே ரிட்டையராக அந்த இந்திய பவுலர் தான் காரணம்.. 2023 உ.கோ தொடரில் மிரட்டப்போகும் 4 பவுலர்களை பெயரிட்ட – பின்ச்

Aaron Finch 2
- Advertisement -

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஆரோன் பின்ச் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த வருடம் 35 வயதிலேயே முழுமையாக ஓய்வு பெற்றார். கடந்த 2011ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்காக அறிமுகமான அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறிய போதிலும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி டேவிட் வார்னருடன் களமிறங்கும் நிரந்தர துவக்க வீரராக உருவெடுத்து 2015 உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

அதன் பின் மைக்கேல் க்ளார்க் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து கேப்டனாகவும் அறிவிக்கப்பட்ட அவர் டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரராக (172) உலக சாதனை படைத்து 2019 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவை வழி நடத்தினர். அதை விட அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஆஸ்திரேலியாவுக்கு ஒரே ஒரு குறையாக இருந்த டி20 உலகக் கோப்பையை கடந்த 2021ஆம் ஆண்டு அவர் கேப்டனாக வென்று கொடுத்தார்.

- Advertisement -

ஓய்வுக்கு காரணம்:
இருப்பினும் அதன் பின் ஃபார்மை இழந்து தடுமாறியதால் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற அவர் பின்னர் டி20 கிரிக்கெட்டிலும் விடைபெற்று தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதி வரும் ஒருநாள் தொடரில் வர்னணையாளராக செயல்பட்டு வருகிறார். முன்னதாக பொதுவாகவே சச்சின் உட்பட உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் ஏதேனும் ஒரு எதிரணி பவுலர்கள் மிகப்பெரிய சவாலை கொடுப்பது வழக்கமாகும்.

அந்த வகையில் இந்தியாவின் புவனேஸ்வர் குமார் தம்முடைய கேரியரில் மிகப்பெரிய சவாலை கொடுத்ததாகவும் அவரை எதிர்கொள்வதற்கு சிரமப்பட்டதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான பல போட்டிகளில் புதிய பந்தை ஸ்விங் செய்து தம்மை நிறைய முறை அவுட்டாக்கிய புவனேஸ்வர் குமாரால் தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விரைவாக ஓய்வு பெற்றதாக அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

- Advertisement -

அதே போல இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் ட்ரெண்ட் போல்ட், முகமது சிராஜ் போன்ற புதிய பந்தை ஸ்விங் செய்யும் பவுலர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “நான் ஓய்வு பெறுவதற்கான காரணம் – புவனேஸ்வர். மிகப்பெரிய சவாலை கொடுத்த அவரை எதிர்கொள்வதை நான் எப்போதுமே தவிர்க்க முயற்சித்தேன்”

இதையும் படிங்க: 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள 4 அணிகள் இதுதான். இர்பான் பதான் கணிப்பு – விவரம் இதோ

“ஆனால் தற்போது நாங்கள் இருவருமே விளையாடவில்லை. எனவே புதிய பந்தை ஸ்விங் செய்யும் பவுலர்கள் இந்த உலகக் கோப்பையில் மிகவும் ஆபத்தானவர்களாக இருப்பார்கள். குறிப்பாக ட்ரெண்ட் போல்ட், மிட்சேல் ஸ்டார்க், ரபாடா ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். அதிலும் குறிப்பாக தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் சிராஜ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்” என்று கூறினார். இந்த நிலையில் சமீப காலங்களில் சுமாராக செயல்பட்டதால் புவனேஸ்வர் உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement