இந்தியர்களே இனியாச்சும் அவங்கள கொண்டாடுங்க.. இறக்கமற்ற டீமா மாறிட்டாங்க.. ரொம்ப கஷ்டம்.. சோயப் அக்தர் பாராட்டு

Shoaib Akhtar
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 2ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 302 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுவித்த இந்தியா முதல் அணியாக செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி 88, கில் 92, ஸ்ரேயாஸ் 82 ரன்கள் எடுத்த உதவியுடன் 358 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

ஆனால் அதை சேசிங் செய்த இலங்கை முதல் பந்திலிருந்தே இந்தியாவின் அனல் பறந்த பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது. அதனால் அந்த அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறிய நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 5, முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

அக்தர் பாராட்டு:
அதனால் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் தொடர்ச்சியாக இந்தியா வென்றுள்ளதால் நிச்சயம் இம்முறை 2011 போல கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வலுவான பேட்டிங், பவுலிங் செயல்பாடுகளால் தொடர்ச்சியான வெற்றிகளை குவித்து வரும் இந்தியா இரக்கமற்ற அணியாக மாறியுள்ளதாக சோயப் அக்தர் வெளிப்படையாக பாராட்டியுள்ளார்.

மேலும் பொதுவாகவே விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற பேட்ஸ்மேன்களை மட்டுமே கொண்டாடும் இந்திய ரசிகர்கள் இனிமேல் வெற்றிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் ஷமி, பும்ரா, சிராஜ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களையும் கொண்டாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் தற்போதைய இந்திய அணியை கோப்பையை வெல்வதிலிருந்து எதிரணிகளால் தடுத்து நிறுத்துவது அசாத்தியம் என்றும் தெரிவிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்தியா இறக்கமற்ற அணியாக மாறியுள்ளது. தற்போது அவர்களை தடுத்து நிறுத்துவது அசாத்தியமானதாக உருவாகியுள்ளது. தற்போதைய நிலைமையில் இந்தியர்கள் தங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டாட வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோளாகும். ஏனெனில் வான்கடே மைதானத்தில் வீசப்பட்ட ஒவ்வொரு பந்தும் தரமாக இருந்ததால் ரசிகர்கள் கூச்சலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மேலும் ஷமிக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்”

இதையும் படிங்க: ஸ்கோர்கார்ட் எங்கப்பா.. ஒரே வருஷத்தில் 4 அடி.. இலங்கையை தரை மட்டமாக்கிட்டீங்க.. சோயப் அக்தர் அதிரடி பாராட்டு

“நல்ல ஃபார்முக்கு வந்துள்ள அவர் கடந்த 3 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவரைப் போலவே சிராஜ், பும்ரா ஆகியோரும் அதிரடியாக செயல்படுகின்றனர். குறிப்பாக பும்ரா ஒருபுறம் அழுத்தத்தை ஏற்படுத்தி எதிர்ப்புறம் எஞ்சிய 2 இந்திய பவுலர்கள் விக்கெட்டை எடுக்க வழிவகை செய்தார். அந்த வகையில் மிகவும் அச்சுறுத்தலாக பந்து வீசம் அவரிடம் அபாரமான திறமை இருக்கிறது. இந்த கூட்டணி கடைசி வரை ஃபிட்டாக நின்று வெல்லும் என்று நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement