410 ரன்ஸ்.. இங்கிலாந்தை புரட்டி எடுத்து.. 88 வருடம் கழித்து வரலாற்று சாதனை படைத்த இந்திய மகளிரணி

Womens Test IND vs ENG
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய மகளிரணி தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. டிசம்பர் 14ஆம் தேதி மும்பையில் துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா 17, சஃபாலி வர்மா 19 என துவக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

ஆனால் மிடில் ஆர்டரில் மிகச் சிறப்பாக விளையாடிய இளம் வீராங்கனை சுபாஷ் சதீஷ் அரை சதம் கடந்து 69 ரன்களும் ஜெமிமா ரோட்ரிகஸ் 68 ரன்களும் எடுத்தனர். அவர்களுடன் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 49 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமாக சென்ற போதிலும் தீப்தி சர்மா தம்முடைய பங்கிற்கு அரை சதமடித்து 60* ரன்களும் யாஸ்திகா பாட்டியா 66 ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

இந்தியாவின் சாதனை:
இறுதியில் ஸ்னே ராணா 30 ரன்கள் எடுத்ததால் முதல் நாள் முடிவில் இந்தியா 410/7 ரன்கள் குவித்தது. குறிப்பாக 4 வீராங்கனைகள் அரை சதம் அடித்து 60க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்ததால் முதல் நாளிலேயே 4.36 என்ற வேகமான ரன் ரேட்டில் இந்தியா 410 எனும் பெரிய ரன்களை குவித்து இந்த போட்டியில் கிட்டத்தட்ட ஆரம்பத்திலேயே வெற்றி வாய்ப்பை உறுதி செய்துள்ளது என்று சொல்லலாம்.

அதை விட இதன் வாயிலாக மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 88 வருடங்கள் கழித்து ஒரு போட்டியின் முதல் நாளிலேயே 410 ரன்கள் குவித்த அணி என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் கடைசியாக கடந்த 1935ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணி முதல் நாளிலேயே 431/4 ரன்கள் குவித்தது.

- Advertisement -

அதற்கு பின் 1996ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து மகளிரணி முதல் நாளில் 362/5 ரன்கள் எடுத்ததே முந்தைய அதிகபட்ச ரன்களாகும். அதன் பின் கடந்த 25 வருடங்களில் நடைபெற்ற மகளிர் டெஸ்ட் போட்டிகளில் எந்த அணியும் இப்படி முதல் நாளிலேயே 400+ ரன்கள் குவித்ததில்லை. அந்தளவுக்கு சொந்த மண் சாதகத்தை பயன்படுத்தி இப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டது ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது.

இதையும் படிங்க: டெஸ்ட் தொடரில் இந்தியா – தெ.ஆ பவுலர்கள் காயத்தால் விலகல்? வெளியான தகவல்.. இரு அணிக்கும் மெகா பின்னடைவு

மறுபுறம் பந்து வீச்சில் சற்று தடுமாற்றமாகவே செயல்பட்ட இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக லாரன் பெல் 2 விக்கெட்டுகள் எடுத்தார். இதைத் தொடர்ந்து நடைபெறும் 2வது நாளில் இந்தியாவை விரைவாக அவுட்டாக்கும் முனைப்புடன் இங்கிலாந்து பந்து வீச உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement