WTC Final : இளம் வீரர்கள் வந்தும் இந்தியாவால் அவரை கழற்றி விட முடியல, அதான் அவரோட தரம் – சீனியரை பாராட்டிய மஞ்ரேக்கர்

Sanjay
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி வரும் ஜூன் 7 முதல் 11 வரை லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் கோப்பையை வென்று 2019/20, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களது சொந்த மண்ணிலும் சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பையிலும் தோல்வியை பரிசளித்த இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியா முயற்சிக்க உள்ளது. அதே போல சமீப காலங்களில் ஆஸ்திரேலியாவில் அடக்கி வரும் இந்தியா இப்போட்டியில் வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க போராட உள்ளது.

Nathan Lyon Pujara IND vs AUS

- Advertisement -

இப்போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர்களை விட நம்பிக்கை நட்சத்திர அனுபவ வீரர் செடேஸ்வர் புஜாரா விக்கெட்டை எடுத்தால் போதும் வெற்றி பெறலாம் என ஆஸ்திரேலிய அணியினர் நினைப்பார்கள் என்று சொன்னால் மிகையாகாது. ஏனெனில் 2011ஆம் ஆண்டு ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் மெதுவான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விளையாடு வாய்ப்பை முற்றிலுமாக இழந்தார்.

டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்:
இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டுக்கு பின் அவரைப்போலவே களத்தில் நங்கூரமாக நின்று அதிகப்படியான பந்துகளை எதிர்கொண்டு எதிரணி பவுலர்களை களைப்படையை வைத்து பெரிய ரன்களை எடுக்கும் ஸ்டைலை கொண்ட அவர் நவீன கிரிக்கெட்டின் மிகச்சிறந்த டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் வீரராக கடந்த 10 வருடங்களில் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

Pujara County Steve Smith

குறிப்பாக 2019/20இல் 500க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி தலைமையில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்க முக்கிய பங்காற்றிய அவர் 2020/21இல் பெரிய ரன்களை எடுக்க தவறினாலும் ஹேசல்வுட் போன்ற பவுலர்கள் வீசிய பந்துகளை பாறையை போல எதிர்கொண்டு உடம்பில் அடி வாங்கி முக்கிய ரன்களை எடுத்து வெற்றியில் பங்காற்றினார். இருப்பினும் 2019க்குப்பின் சதமடிக்காமல் தவித்ததால் கடந்த வருடம் கழற்றி விடப்பட்ட அவரை ஐபிஎல் தொடரில் சென்னை நிர்வாகமும் விடுவித்தது.

- Advertisement -

இருப்பினும் மனம் தளராமல் இங்கிலாந்தின் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சக்சஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்து கொண்ட அவர் சதங்களையும் இரட்டை சதங்களை அடித்து பழைய ஃபார்முக்கு திரும்பிய கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ரத்து செய்யப்பட்ட 5வது போட்டியில் மீண்டும் கம்பேக் கொடுத்து கடந்த டிசம்பரில் நடைபெற்ற வங்கதேச தொடரில் சதமடித்தார். மேலும் விராட் கோலி முதல் ஷமி வரை எஞ்சிய 10 வீரர்களும் ஐபிஎல் 2023 தொடரில் விளையாடிய போது அவர் மட்டும் 2 மாதங்கள் முன்பாகவே இங்கிலாந்து பயணித்து இந்த ஃபைனலுக்கு தயாராகும் வகையில் கவுண்டி தொடரில் விளையாடினார்.

Sanjay

இந்நிலையில் நிறைய இளம் வீரர்கள் வந்தும் டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாராவை தாண்டி செல்ல முடியாத நிலைமையில் தற்போதைய இந்திய அணி இருப்பதே அவருடைய தரம் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்தில் இந்தியா விளையாடினாலும் இல்லாவிட்டாலும் அவர் தொடர்ந்து கவுண்டி தொடரில் விளையாடி வருகிறார். ஏனெனில் அந்த சமயத்தில் இந்தியாவில் டி20 போட்டிகள் நடைபெற்றது”

இதையும் படிங்க:தோனி, யுவி இல்ல – அவர் தான் ஆசியாவின் மகத்தான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் – முன்னாள் பாக் வீரரை பாராட்டிய சேவாக்

“கடந்த வருடம் கழற்றி விடப்பட்ட போது புஜாராவின் கேரியர் அந்தளவுக்கு சிறப்பாக முடியாது என்று அனைவரும் நினைத்தோம். ஆனால் இன்று இந்திய டெஸ்ட் அணியின் பேட்டிங்கில் புஜாரா தான் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய முக்கிய வீரராக இருக்கிறார். அவர் கம்பேக் கொடுத்ததை வைத்து சொல்கிறேன் தற்போதைக்கு புஜாராவை தாண்டிய ஒரு வாழ்க்கைக்கு இந்திய டெஸ்ட் அணி தயாராக இல்லை. அவர்களுக்கு புஜாரா இன்னும் தேவைப்படுகிறார்” என்று கூறினார்.

Advertisement