2023 ஆசியக்கோப்பை தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி அதிகாரபூர்வ அறிவிப்பு – முழு லிஸ்ட் இதோ

Asia Cup INDIA
- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐ.சி.சி யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பாக ஆசிய கோப்பை தொடரானது பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாட்டில் நடைபெற உள்ளது. மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான ஆறு அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ இன்றைய மீட்டிங்கிற்கு பிறகு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

இந்த ஆசிய கோப்பை தொடருக்கான அணித்தேர்வு கூட்டத்தில் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர், அவரது குழு நிர்வாகிகள், பயிற்சியாளர் டிராவிட், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் என பலரும் கலந்து கொண்டனர். அதன்படி சில மணி நேரங்கள் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பிறகு தற்போது ஆசியக் கோப்பை தொடருக்கான 17 பேர் கொண்ட முழு இந்திய அணியையும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த ஆசியக் கோப்பை தொடருக்கான அணியில் இடம் பிடித்திருக்கும் வீரர்களே பெரும்பாலும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான அணியிலும் இடம் பிடிப்பார்கள் என்பதனால் இந்த தொடரில் எந்தெந்த வீரர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த முழு பட்டியலும் பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

- Advertisement -

இந்த அணியில் காயம் காரணமாக சமீபகாலமாகவே இந்திய அணியில் இடம்பிடிக்காமல் இருந்து வந்த கே.எல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். அதோடு திலக் வர்மாவிற்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் முழு வீரர்கள் லிஸ்ட் இதோ :

இதையும் படிங்க : IND vs IRE : டெத் ஓவரின் கில்லி என்பதை நிரூபித்த பும்ரா – புவனேஷ்வரின் ஆல் டைம் தனித்துவ உலக சாதனை சமன் செய்து அபார கம்பேக்

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) சூரியகுமார் யாதவ், 7) திலக் வர்மா, 8) இஷான் கிஷன், 9) ஹார்டிக் பாண்டியா, 10) ரவீந்திர ஜடேஜா, 11) ஷர்துல் தாகூர், 12) அக்சர் படேல், 13) குல்தீப் யாதவ், 14) பும்ரா, 15) முஹமது ஷமி, 16) முகமது சிராஜ், 17) பிரசித் கிருஷ்ணா.

Advertisement