IND vs IRE : டெத் ஓவரின் கில்லி என்பதை நிரூபித்த பும்ரா – புவனேஷ்வரின் ஆல் டைம் தனித்துவ உலக சாதனை சமன் செய்து அபார கம்பேக்

Jasprit Bumrah Bhuvneswar Kumar
- Advertisement -

நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து குணமடைந்து கேப்டனாக தலைமை தாங்கி வரும் அயர்லாந்துக்கு எதிரான 3 போட்டிகள் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் மழைக்கு மத்தியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியிலும் 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 185/5 ரன்கள் சேர்த்தது.

IND vs IRE Arshdeep Prasid krishna

- Advertisement -

அதிகபட்சமாக ருதுராஜ் 53, சஞ்சு சாம்சன் 40, ரிங்கு சிங் 38 என முக்கிய பேட்ஸ்மேன்கள் தேவையான ரன்களை அதிரடியாக எடுக்க அயர்லாந்து சார்பில் அதிகபட்சமாக பேரி மெக்கார்த்தி 2 விக்கெட்டுகளை சேர்த்தார். அதைத்தொடர்ந்து 176 ரன்களை துரத்திய அயர்லாந்துக்கு ஆண்டி பால்பரின் அதிரடியாக 72 (51) ரன்கள் எடுத்தும் இதர பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 20 ஓவரில் 152/8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்தளவுக்கு சிறப்பாக செயல்பட்ட இந்தியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

டெத் ஓவரின் கில்லி:
அந்த வகையில் விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமலேயே இளம் வீரர்களுடன் இத்தொடரை வென்றுள்ள இந்தியா சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் சந்தித்து தோல்வியிலிருந்து மீண்டெழுத்து தங்களை நம்பர் ஒன் அணி என்பதின் நிரூபித்துள்ளது. அதை விட கடந்த 2022 ஜூலை மாதம் காயத்தை சந்தித்து 2 முறை குணமடைந்து மீண்டும் காயமடைந்து வெளியேறிய பும்ரா இத்தொடரில் கேப்டனாக அடுத்தடுத்த வெற்றிகளும் அபாரமான கம்பேக் கொடுத்துள்ளார்.

Jasprit Bumrah 2

குறிப்பாக முதல் போட்டியின் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் இந்த போட்டியிலும் பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினார். அதே போல டெத் ஓவர்களில் 17வது ஓவரில் 4 ரன்களை மட்டும் கொடுத்த அவர் பேரி மெக்கார்த்தி விக்கெட்டை வீழ்த்தினார். அதை விட கடைசி ஓவரில் 0, 0, 0 என முதல் 3 பந்துகளில் ரன்களே கொடுக்காத அவர் 4வது பந்தில் மார்க் அடைரை அவுட்டாக்கினார். மேலும் 5வது பந்திலும் ரன்களை கொடுக்காத அவர் வீசிய கடைசி பந்தில் ஜோஸ்வா லிட்டில் அடிக்காமல் தவறவிட்ட பந்தை விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனும் பிடிக்காமல் விட்டதால் பைஸ் வாயிலாக பவுண்டரி சென்றது.

- Advertisement -

மொத்தத்தில் 20வது ஓவரில் 1 ரன் கூட கொடுக்காத பும்ரா 1 விக்கெட் எடுத்து மெய்டன் ஓவராக வீசினார். கடந்த 2016இல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி தம்முடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் அவர் இப்படி டெத் ஓவர்களில் குறைந்த ரன்களை கொடுத்து விக்கெட்டுகளை எடுப்பதில் வல்லவர் என்பதை அனைவரும் அறிவோம். அந்த வகையில் இப்போட்டியில் கடைசி ஓவரில் மெய்டன் வீசிய அவர் தம்முடைய கேரியரில் இதுவரை மொத்தம் 10 மெய்டன் ஓவர்களை வீசியுள்ளார்.

Bumrah

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக மெய்டன் ஓவர்களை வீசிய பவுலர் என்ற இந்தியாவின் புவனேஸ்வர் குமார் உலக சாதனையை பும்ரா சமன் செய்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஜஸ்பிரித் பும்ரா/புவனேஸ்வர் குமார் : தலா 10
2. நுவான் குலசேகரா/முஸ்தபிசுர் ரஹ்மான் : தலா 6

- Advertisement -

இதில் புவனேஸ்வர் குமார் 298 ஓவர்களில் 10 மெய்டன் ஓவர்கள் வீசியுள்ள நிலையில் பும்ரா வெறும் 221 ஓவரிலேயே 10 மெய்டன்களை வீசியுள்ளார் என்பது அவருடைய திறமைக்கு மற்றுமொரு சான்றாகும். அந்த வகையில் டெத் ஓவரின் கில்லியாக அவர் மீண்டும் தன்னை நிரூபித்து முழுமையான ஃபார்முக்கு திரும்பியுள்ளது என்றே சொல்லலாம்.

Bumrah 1

இதையும் படிங்க:போதும்டா சாமி உங்க கூட இருந்தது. நான் என் பிரெண்ட் டீமுக்கே போறேன் – அணி மாற்றம் செய்த நிதீஷ் ராணா

முன்னதாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவை கேப்டனாக வழிநடத்தும் முதல் பவுலர் என்ற தனித்துவ சாதனையை படைத்த பும்ரா தற்போது சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு பின் தங்களுடைய முதலிரண்டு போட்டிகளில் வெற்றியை பதிவு செய்த 4வது இந்திய கேப்டன் என்ற பெருமையையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement