போதும்டா சாமி உங்க கூட இருந்தது. நான் என் பிரெண்ட் டீமுக்கே போறேன் – அணி மாற்றம் செய்த நிதீஷ் ராணா

Nitish-Rana
- Advertisement -

அண்மையில் நடைபெற்று முடிந்த 16-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக காயம் அடைந்த ஷ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தா அணிக்காக விளையாட முடியாத சூழல் ஏற்பட்டபோது அந்த அணியின் புதிய கேப்டனாக நிதீஷ் ராணா நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக கேப்டன்சி செய்வதற்கு முன்னதாகவே அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக கேப்டனாக செயல்பட்டு வந்தார்.

Nitish-Rana

- Advertisement -

இந்நிலையில் டெல்லி அணியின் ஒயிட் பால் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவருக்கு பதிலாக இளம் வீரர் யாஷ் துல் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த நிதீஷ் ராணா வெளிப்படையாகவே தான் இனி டெல்லி அணிக்காக விளையாட போவதில்லை என்று தெரிவித்திருந்தார்.

அதுமட்டும் இன்றி ஏற்கனவே டெல்லி அணியில் இருந்த சில வீரர்களுடன் அவருக்கு பிரச்சனை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் டெல்லி அணியில் இருந்து அவர் வெளியேறி வேறொரு அணிக்கு இடம்பெயர்வார் என்றும் பேசப்பட்டு வந்தது.

Rinku Singh

இந்நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக டெல்லி கிரிக்கெட் வாரியத்திடம் அவர் அணியிலிருந்து வெளியேறுவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக தடையில்லா சான்றிதழை பெற விண்ணப்பித்துள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கு அந்த சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளதால் அவர் டெல்லி அணியிலிருந்து அதிகாரபூர்வமாக வெளியேறி உத்தரப்பிரதேச அணியில் இணைகிறார் என்று பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

ஏற்கனவே கொல்கத்தா அணியில் விளையாடி வரும் ரிங்கு சிங் அவரது நெருங்கிய நண்பர் என்பதனால் உத்தர பிரதேச அணியில் நிதீஷ் ராணா இணைய ஆர்வம் காட்டுகிறார். உத்திரபிரதேச அணியில் மிடில் ஆர்டரில் ரிங்கு சிங் மட்டுமே நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் வேளையில் நிதீஷ் ராணா அந்த அணியில் இணைந்தால் மேலும் அந்த அணிக்கு அவரது சேர்க்கை புதிய நம்பிக்கையை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : IND vs IRE : உங்கள வெச்சு நாங்க பல கணக்கு போட்டா நீங்க இப்டி ஏமாத்துறீங்களே? இளம் வீரர் மீது ரசிகர்கள் ஏமாற்றம்

மேலும் நிதீஷ் ராணா மட்டுமின்றி டெல்லி சேர்ந்த மற்றொரு இளம்வீரர் துருவ் ஷோரேவும் டெல்லி அணியில் இருந்து வெளியேற தடையில்லா சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement