IND vs IRE : உங்கள வெச்சு நாங்க பல கணக்கு போட்டா நீங்க இப்டி ஏமாத்துறீங்களே? இளம் வீரர் மீது ரசிகர்கள் ஏமாற்றம்

Tilak Varma 2
- Advertisement -

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த 2 போட்டிகளின் முடிவில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து கேப்டனாக கம்பேக் கொடுத்துள்ள இத்தொடரில் இளம் வீரர்களுடன் அபாரமாக செயல்பட்டுள்ள இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் தோல்வியிலிருந்து இருந்து கோப்பையை கைப்பற்றி தங்களை நம்பர் ஒன் அணி என்பதையும் நிரூபித்துள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் 20ஆம் தேதி டப்லின் நகரில் நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 185/5 ரன்கள் எடுத்தது.

IND vs IRE Arshdeep Prasid krishna

- Advertisement -

இந்தியாவுக்கு அதிகபட்சமாக ருதுராஜ் 58 (43) சஞ்சு சம்சான் 38 (21) ரிங்கு சிங் 38 (21) என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை எடுக்க அயர்லாந்து சார்பில் அதிகபட்சமாக பேரி மெக்கார்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து 186 ரன்களை சேசிங் செய்த அயர்லாந்து முடிந்தளவுக்கு போராடியும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 20 ஓவர்களில் 152/8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ஆண்டி பால்பரின் 72 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

ரசிகர்கள் ஏமாற்றம்:
முன்னதாக இந்த தொடரில் நம்பிக்கை நட்சத்திர இளம் வீரர் திலக் வர்மா முதல் போட்டியில் 3வது இடத்தில் களமிறங்கி கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் இந்த போட்டியிலும் 1 ரன்னில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தார். இருப்பினும் மிடில் ஆடரில் சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், சிவம் துபே ஆகியோரது அதிரடியான ஆட்டத்தால் இந்தியா எளிதாக வென்றது. முன்னதாக ஹைதராபாத்தைச் சேர்ந்த திலக் வர்மா கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் சமீபத்திய வெஸ்ட் இண்டிஸ் டி20 தொடரில் அறிமுகமானார்.

Tilak-Varma

அதில் சவாலான மைதானங்களில் சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா போன்ற நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்கள் தடுமாறிய போது மிகச்சிறப்பாக பேட்டிங் செய்த அவர் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து இந்தியாவின் வெற்றிகளில் போராடினார். அதிலும் 20 வயதிலேயே முதிர்ச்சியான செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் அதிகபட்ச டி20 ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரராக ரோகித் சர்மாவின் சாதனைகளை தகர்த்து அனைவரையும் திரும்பி பார்க்கும் வகையில் அசத்தினார்.

- Advertisement -

மேலும் அதிரடியான பேட்டிங், தேவையான நேரத்தில் பவுலிங், துடிதுடிப்பான ஃபீல்டிங் போன்றவைகளால் அசத்திய அவர் அடுத்த சுரேஷ் ரெய்னா கிடைத்துவிட்டார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியடையும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டார் என்று சொல்லலாம். மறுபுறம் 2011 உலகக்கோப்பையில் யுவராஜ் சிங், கௌதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா போன்ற இடது கை பேட்ஸ்மேன்கள் வெற்றியில் முக்கிய பங்காற்றிய நிலையில் தற்போதைய அணியில் டாப் 6 பேட்ஸ்மேன்கள் வலது கை வீரர்களாக இருக்கின்றனர்.

Tilak-Varma-1

அதே சமயம் 4வது இடத்தில் விளையாடுவார் என்று கருதப்படும் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தை சந்தித்திருப்பதால் அந்த 2 பிரச்சனைக்கும் ஒரே தீர்வாக ஒரே கல்லில் 2 மாங்காய் போல் திலக் வர்மாவை தேர்வு செய்ய வேண்டுமென கடந்த ஒரு வாரமாகவே ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் சௌரவ் கங்குலி வரை ஏராளமானவர்கள் கருத்துக்களையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் சுமாரான பவுலிங்கை கொண்ட வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒரு டி20 தொடரில் அடித்து விட்டார் என்பதற்காக கிரிக்கெட்டில் அறிமுகமாக அவரை அவசரப்பட்டு உலக கோப்பையில் தேர்வு செய்யக்கூடாது என்ற கருத்துக்களும் காணப்படுகின்றன.

இதையும் படிங்க:IND vs IRE : மேட்சுக்கு மேட்ச் எனக்கு ஒரே தலைவலியா இருக்குங்க. வெற்றிக்கு பிறகு கேப்டன் பும்ரா – பேசியது என்ன?

எனவே அந்த விமர்சனங்களை தாண்டி 20 வயதிலேயே உலகக் கோப்பை எனும் மாபெரும் வாய்ப்பை உறுதி செய்வதற்கு இன்னும் ஒரு நாள் போட்டிகளிலேயே அறிமுகமாகாமல் இருக்கும் அவர் நமக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளிலும் அசத்த வேண்டிய நிலைமையில் இருக்கிறார். அந்த சூழ்நிலையில் இந்த தொடரில் அவர் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்துவதால் உங்களை வைத்து நாங்கள் நிறைய கணக்கு போட்டோம் ஆனால் நீங்கள் ஏமாற்றத்தை கொடுக்கும் வகையில் செயல்படுகிறீர்களே என்று ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement