IND vs IRE : மேட்சுக்கு மேட்ச் எனக்கு ஒரே தலைவலியா இருக்குங்க. வெற்றிக்கு பிறகு கேப்டன் பும்ரா – பேசியது என்ன?

Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியானது நேற்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் ஏற்கனவே முதலாவது போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியானது நேற்றைய இரண்டாவது போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 33 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

IND-vs-IRE

- Advertisement -

அதன்படி நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற இந்த இரண்டாவது டி20 போட்டியில் டாசில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணியானது முதலில் பந்துவீசும் என்று அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது பேட்ஸ்மேன்களின் அற்புதமான ஆட்டம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது.

இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்களையும், சஞ்சு சாம்சன் 40 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய அயர்லாந்து அணியானது 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே குவித்தது.

Samson-and-Ruturaj

இதன் காரணமாக 33 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியானது இந்த போட்டியில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் பும்ரா கூறுகையில் : இந்த வெற்றி உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய போட்டிக்கான மைதானம் டிரையாக இருந்ததால் மைதானம் சற்று மெதுவாக இருக்கும் என்று நினைத்தோம்.

- Advertisement -

அதனால் முதலில் பேட்டிங் செய்யவும் நினைத்தோம். அந்த வகையில் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியதில் மகிழ்ச்சி. இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்வது மிகவும் கடினம். ஒவ்வொரு போட்டிக்குமே பிளேயிங் லெவனை தேர்வு செய்வது எங்களுக்கு ஒரு நல்ல தலைவலியாக இருக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு வீரருமே போட்டியில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : வீடியோ : 6, 6, 6 கடைசி ஓவர்களில் அட்டகாசம் நிகழ்த்திய ரிங்கு – தல தோனியின் வழியில் ஃபினிஷராக அவதாரம் எடுத்துள்ளாரா

அதோடு அனைவருமே நம்பிக்கையுடன் காத்திருப்பதால் யாரை தேர்வு செய்வது என்கிற சூழல் ஏற்படுகிறது. அணியில் உள்ள அனைவருமே இந்தியாவுக்காக விளையாட நினைக்கிறார்கள். அந்த அளவிற்கு அனைவருமே கடின உழைப்பு கொடுத்து இந்த இடத்தில் வந்து நிற்கிறார்கள் என ஜஸ்ப்ரீத் பும்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement