தமிழக வீரருக்கு ஏற்பட்ட ஏமாற்றம்.. டாசுக்கு பிறகு சூரியகுமார் யாதவ் எடுத்த அதிரடி முடிவு – விவரம் இதோ

Suryakumar-Yadav
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது நவம்பர் 23-ஆம் தேதியான இன்று துவங்கி டிசம்பர் மூன்றாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியானது பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று நவம்பர் 23-ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் துவங்கியது.

இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியும், மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. அதன்படி நடைபெற்று முடிந்த டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தங்களது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியானது தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் தமிழக ஆல்ரவுண்டான வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதேபோன்று வேகப்பந்து வீச்சாளரான ஆவேஷ் கான் மற்றும் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே ஆகியோருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இருப்பினும் இனிவரும் போட்டிகளில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது. அதன்படி இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

- Advertisement -

1) ருதுராஜ் கெய்க்வாட், 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) இஷான் கிஷன், 4) சூரியகுமார் யாதவ், 5) திலக் வர்மா, 6) ரிங்கு சிங், 7) அக்சர் படேல், 8) ரவி பிஷ்னாய், 9) அர்ஷ்தீப் சிங், 10) முகேஷ் குமார், 11) பிரசித் கிருஷ்ணா.

இதையும் படிங்க : பாண்டியா காயத்தால்.. ஆரம்பிச்ச இடத்துலயே முடியும்ன்னு நெனைக்கல.. தனது கேரியர் பற்றி அஸ்வின் உருக்கம்

அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் நடைபெறவுள்ள டி20 உலககோப்பை தொடருக்காக தயாராகி வருவதால் இந்த தொடரானது அனைத்து வீரர்களுக்கும் முக்கியமான தொடராக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement