IND vs NZ : 2 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள மாற்றம் – பிளேயிங் லெவன் லிஸ்ட் இதோ

IND-vs-NZ
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே ராஞ்சி நகரில் நடைபெற்று முடிந்த டி20 முதலாவது போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய நியூசிலாந்து அணி இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது ஜனவரி 29-ஆம் தேதி இன்று இரவு 7:30 மணிக்கு லக்னோ மைதானத்தில் துவங்குகிறது. ஏற்கனவே முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்திய அணி காத்திருக்கிறது.

அதேவேளையில் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டி20 தொடரை கைப்பற்றும் முனைப்புடன் நியூசிலாந்து அணியும் களமிறங்க தயாராகி வருகிறது. இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த இரண்டாவது போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

Arshdeep Singh

இந்நிலையில் இந்த இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பேட்டிங் ஆர்டரில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றாலும் பந்துவீச்சு துறையில் கடந்த போட்டியின் போதும் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக முகேஷ் குமாருக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கலாம் என்று தெரிகிறது.

- Advertisement -

ஆனால் அந்த ஒரு மாற்றத்தை தவிர வேறு எந்த மாற்றமும் அணியில் நிகழ்த்தப்படாது என்றும் கூறப்படுகிறது. அதன்படி இன்றைய இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : உலகம் அளவில் 3க்கும் மேற்பட்ட டி20 அணிகளை வைத்துள்ள 4 இந்திய ஐபிஎல் அணி நிர்வாக உரிமையாளர்கள் – வித்யாச பதிவு

1) சுப்மன் கில், 2) இஷான் கிஷன், 3) ராகுல் திரிபாதி, 4) சூரியகுமார் யாதவ், 5) ஹார்டிக் பாண்டியா, 6) தீபக் ஹூடா, 7) வாஷிங்க்டன் சுந்தர், 8) குல்தீப் யாதவ், 9) ஷிவம் மாவி, 10) உம்ரான் மாலிக், 11) அர்ஷ்தீப் சிங் / முகேஷ் குமார்.

Advertisement