உலகம் அளவில் 3க்கும் மேற்பட்ட டி20 அணிகளை வைத்துள்ள 4 இந்திய ஐபிஎல் அணி நிர்வாக உரிமையாளர்கள் – வித்யாச பதிவு

Nita Ambani MI
- Advertisement -

நூற்றாண்டுக்கு முன்பாக டெஸ்ட் போட்டிகளாக துவங்கப்பட்ட கிரிக்கெட் ரசிகர்களை கவர்வதற்காக 60 ஓவர்களாக கொண்ட ஒருநாள் போட்டிகளாக உருவாக்கப்பட்டு பின்னர் 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அது 90களில் மிகவும் புகழ்பெற்றதாக மாறிய நிலையில் ஒருநாள் முழுவதும் அமர்ந்து பார்க்க விரும்பாத ரசிகர்களை கவர்வதற்காக துவங்கப்பட்ட 20 ஓவர் போட்டிகள் வரலாற்றில் அதுவரை காணாத திரில்லர் திருப்பங்கள் நிறைந்த போட்டிகளை பரிசாக கொடுத்தது. அதனால் டி20 கிரிக்கெட் மேலும் பிரபலமடைந்த நிலையில் வருங்கால வீரர்களை உருவாக்குவதற்காக இந்தியாவில் 2008இல் 8 அணிகளுடன் ஐபிஎல் தொடர் உருவாக்கப்பட்டது.

அது சர்வதேச டி20 போட்டிகளையும் மிஞ்சும் அனல் பறக்கும் திரில்லர் திருப்பங்களை அரங்கேற்றி கடந்த 15 வருடங்களில் பல பரிணாமங்களை கடந்து இன்று உலகின் நம்பர் ஒன் தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதன் வளர்ச்சியை பார்த்து ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட பல்வேறு வெளிநாடுகள் தங்களது நாட்டில் பிரத்யேக டி20 தொடரை துவங்கி நடத்தி வருகின்றன. அந்த வரிசையில் இந்த வருடம் தென்னாபிரிக்கா மற்றும் அமீரக நாட்டு வாரியங்கள் புதிதாக டி20 தொடரை உருவாக்கி நடத்தி வருகின்றன.

- Advertisement -

4 நிர்வாகங்கள்:
ஆனால் சர்வதேச கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அளவுக்கு அபார வளர்ச்சி கண்டுள்ள ஐபிஎல் தொடர் தான் அந்தத் தொடர்களிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன என்றே கூறலாம். ஏனெனில் ஐபிஎல் தொடரை போலவே அதில் அணிகளை வாங்கிய உரிமையாளர்கள் 15 வருடங்களில் இன்று மேலும் பணக்காரர்களாக உருவெடுத்துள்ளார்கள். அதனால் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களில் தங்களது கிளை அணிகளை வாங்கியுள்ள அவர்கள் தங்களது அணி நிர்வாகத்தை மேலும் விரிவுபடுத்தி வருகிறார்கள். அந்த உலக அளவில் மூன்றுக்கும் மேற்பட்ட டி20 அணிகளை வைத்துள்ள 4 உரிமையாளர்களை பற்றி பார்ப்போம்:

1. டெல்லி: டெல்லி டேர்டெவில்ஸ் பெயருடன் ஐபிஎல் பயணத்தை துவங்கி இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் என்ற பெயருடன் விளையாடி வரும் டெல்லி அணிக்கு ஜிஎம்ஆர் – ஜேஎஸ்டபிள்யூ ஸ்போர்ட்ஸ் குழுமம் உரிமையாளர் ஆகும்.

- Advertisement -

கடந்த 2020 வரை ஐபிஎல் தொடரில் மட்டுமே அணியை வைத்திருந்த அந்த நிர்வாகம் தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் சிஎஸ்ஏ டி20 தொடரில் பிரேட்டோரியா கேப்பிடல்ஸ், ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் இந்தியா கேப்பிடல்ஸ் மற்றும் அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல் டி20 தொடரில் துபாய் கேப்பிடல்ஸ் ஆகிய மேலும் 3 புதிய அணிகளை வாங்கியுள்ளது. அது போக விரைவில் நடைபெறும் மகளிர் ஐபிஎல் தொடரில் டெல்லி நகரை மையப்படுத்திய அணியை வாங்கியுள்ள அந்த அணி நிர்வாகத்திடம் தற்போது 5 டி20 அணிகள் உள்ளது.

2. அம்பானி குழுமம்: இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவராக திகழும் அம்பானி அவர்களது மகன் முகேஷ் அம்பானி ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் என்பதை அனைவரும் அறிவோம்.

- Advertisement -

தற்போது துபாயில் எம்ஐ எமிரேட்ஸ், தென் ஆப்பிரிக்காவில் எம்ஐ கேப் டவுன் ஆகிய புதிய 2 அணிகளை வாங்கியுள்ள அந்த நிர்வாகம் விரைவில் நடைபெறும் மகளிர் ஐபிஎல் தொடரில் மும்பை நகரை மையப்படுத்திய அணியையும் வாங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது அம்பானி குழுமத்திடம் 4 டி20 அணிகள் உள்ளது.

3. ராஜஸ்தான்: ஐபிஎல் தொடரின் முதல் சாம்பியன் பட்டத்தை வென்ற ராஜஸ்தான் அணிக்கு எமர்ஜிங் மீடியா குழுமம் உரிமையாளராக உள்ளது. ஐபிஎல் அணிகளிலேயே முதல் முறையாக ராஜஸ்தான் நிர்வாகம் தான் தங்களது கிளையை வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பார்படாஸ் அணியை வாங்கி விரிவுபடுத்தியது.

- Advertisement -

அத்துடன் கரீபியன் தொடரில் பார்படாஸ் மகளிர் அணியை வாங்கிய ராஜஸ்தான் நிர்வாகம் தென்னாபிரிக்காவில் பார்ல் அணியையும் வாங்கி மொத்தம் 4 டி20 அணிகளுடன் தங்களது குழுமத்தை விரிவுபடுத்தியுள்ளது.

4. கொல்கத்தா: பாலிவுட் நடிகர் சாருக்கான் தலைமையிலான ஷாருக்கான் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் மேத்தா குரூப் குழுமம் கொல்கத்தா ஐபிஎல் அணியின் உரிமையாளராக இருப்பதை அறிவோம். அதைத்தொடர்ந்து கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் ட்ரினிடாட் ஆடவர் மற்றும் மகளிர் அணியை வாங்கிய அந்த குழுமம் தற்போது துபாயில் நடைபெறும் ஐஎல் டி20 தொடரில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியை வாங்கியுள்ளது.

இதையும் படிங்க: இந்திய அணியில் சர்பராஸ் கானை தேர்வுசெய்யாதது ஏன்? – பி.சி.சி.ஐ தரப்பில் வெளியான தகவல்

அது போக விரைவில் அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் தொடரில் ஒரு அணியை வாங்கியுள்ள கொல்கத்தா நிர்வாகத்திடம் மொத்தம் 5 டி20 அணிகள் உள்ளது.

Advertisement