இந்திய அணியில் சர்பராஸ் கானை தேர்வுசெய்யாதது ஏன்? – பி.சி.சி.ஐ தரப்பில் வெளியான தகவல்

Sarfaraz-khan-2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான சர்பராஸ் கான் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது 25 வயதான அவர் கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணியில் இடம் பிடிக்க கடுமையான போராட்டத்தை நிகழ்த்தி வருகிறார். அதிலும் குறிப்பாக மும்பை அணிக்காக ரஞ்சி கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக மூன்று சீசனில் அவர் மலைபோல ரன்களை குவித்திருந்தாலும் அவரை இந்திய அணி இன்னும் அணியில் சேர்க்காதது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sarfaraz khan

- Advertisement -

அதோடு சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட அவரது பெயர் இடம் பெறாமல் போனபோது பெரிய அளவில் விமர்சனத்தை எழுப்பியது. ஏனெனில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அவரது பெயர் இடம்பெறாமல் போன அடுத்த சில நாட்களிலேயே டெல்லி அணிக்கு எதிராக ஒரு சதத்தினை அடித்து தன்னை ஏன் தேர்வு செய்யவில்லை என்று அவர் ஒரு கேள்வியை தேர்வுக்குழுவினர் முன்னர் தனது சிறப்பான பேட்டிங்கின் மூலம் முன்வைத்தார்.

அதேபோன்று சர்பராஸ் கான் கடைசியாக விளையாடிய மூன்று சீசன்களில் கிட்டத்தட்ட 3000 ரன்கள் வரை அடித்துள்ளார். இதுவரை 37 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 53 இன்னிகளில் 13 சதங்கள் மற்றும் 9 அரைசதங்கள் என 3400 ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.

sarfaraz 2

இப்படி எவ்வளவோ ரன்களை இவர் மலை போல குவித்து வைத்திருந்தாலும் அவருக்கு இதுவரை ஒரு வாய்ப்பு கூட வழங்கப்படாதது பெரிய அளவில் கேள்வியை எழுப்பிள்ளது. இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சர்பராஸ் கானை ஏன் தேர்வு செய்யவில்லை என்பது குறித்து பிசிசிஐ தரப்பில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அதன்படி தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருக்கும் உறுப்பினரான ஸ்ரீதரன் ஷரத் கூறுகையில் : சர்பராஸ் கான் அணியின் பட்டியலில் தான் உள்ளார். அவருக்கான வாய்ப்பு வரும்போது நிச்சயம் அவர் இந்திய அணிக்காக அழைக்கப்படுவார். தற்போது உள்ள இந்திய அணியில் போட்டி அதிகம் இருப்பதாலேயே அவரை அணியில் எடுக்க முடியாமல் போகிறது.

இதையும் படிங்க : தொடர்ந்து மிரட்டும் சூரியகுமார் – தோனி, ரெய்னா, பாண்டியாவை முந்தி 2 புதிய வரலாற்று சாதனை

குறிப்பாக சர்பராஸ் கான் ஒரு மிடில் ஆடர் பேட்ஸ்மேன். அந்த வரிசையில் களமிறங்க ஏகப்பட்ட வீரர்கள் தற்போது இந்திய அணிக்காக காத்திருக்கின்றனர். எனவே அவரை தேர்ந்தெடுக்க இன்னும் சற்று நேரம் பிடிக்கலாம். தற்போதுள்ள அணியில் முன்னுரிமை அடிப்படையில் தான் தேர்வு நடைபெற்று வருகிறது என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement