IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

IND
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்திற்கான போட்டிகளில் முதலாவதாக நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நாளை மறுதினம் ஜூலை 12-ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது.

IND-vs-WI

- Advertisement -

டோமினிக்கா நகரில் ஜூலை 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை முதலாவது டெஸ்ட் போட்டியும், ஜூலை 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை டிரனிடாடில் இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் பிடிப்பார்கள் என்பதே பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் விளையாடுவார்கள் என்பது குறித்த உத்தேச அணியை இங்கு காணலாம். அதன்படி இந்த முதல் போட்டிக்கான அணியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்று தெரிகிறது. அதனை தொடர்ந்து மூன்றாவது வீரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் புஜாராவின் இடத்தில் களமிறங்குவார் என்று தெரிகிறது.

Yashasvi Jaiswal

பயிற்சி ஆட்டத்தின் போதும் ஜெய்ஸ்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் நான்காவது வீரராக விராத் கோலியும், ஐந்தாவது வீரராகவும் அஜின்க்யா ரஹானேவும் விளையாடுவது உறுதி. அதோடு ஆறாவது வீரராக விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன் கே.எஸ்.பரத்திற்கு பதிலாக இஷான் கிஷன் அறிமுக வாய்ப்பினை பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக காணப்படுகிறது.

- Advertisement -

மேலும் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களாக விளையாட ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள். அதுதவிர்த்து மூன்று வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சிராஜ், ஷர்துல் தாகூர் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : 5 ஐபிஎல் கோப்பைகளை வாங்கிய உங்களிடம் அதை எதிர்பாத்தது ஏமாந்து போய்ட்டேன் – ரோஹித் மீது கவாஸ்கர் ஏமாற்றம்

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 4) விராட் கோலி, 5) அஜின்க்யா ரஹானே, 6) இஷான் கிஷன், 7) ரவீந்திர ஜடேஜா, 8) ரவிச்சந்திரன் அஷ்வின், 9) ஷர்துல் தாகூர், 10) முகமது சிராஜ், 11) நவ்தீப் சைனி.

Advertisement