கே.எல் ராகுலை விட்டுட்டு இலங்கைக்கு பிளைட் ஏறிய இந்திய அணி. என்ன ஆனது? – அப்போ அவரு அவுட்டா?

KL-Rahul
- Advertisement -

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது ஆலூரில் பயிற்சி முகாமில் கலந்து கொண்டது. இந்த பயிற்சி முகாமின் போது இந்திய வீரர்களுக்கு யோ யோ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து 29-ஆம் தேதியான இன்று கே.எல் ராகுலை தவிர்த்து இந்திய அணியினர் அனைவரும் இலங்கை புறப்பட்டனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இப்படி கே.எல் ராகுல் இந்திய அணியுடன் பயணிக்காமல் இந்தியாவிலே இருப்பதால் அவர் இந்த ஆசியக்கோப்பை தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்வி கூட உங்களில் பலருக்கும் எழுந்திருக்கலாம். ஆனால் அதற்கான தெளிவான விளக்கமும் பி.சி.சி.ஐ சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement -

அதன்படி கே.எல் ராகுலுக்கு ஏற்பட்ட காயத்திற்கான அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் தற்போது முழு உடற்தகுதியை எட்டியிருந்தாலும் பயிற்சியின் போது அவருக்கு சிறிய அசவுகரியம் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே கே.எல் ராகுல் தற்போது இலங்கை பயணிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதோடு பி.சி.சி.ஐ மருத்துவ குழுவின் தீவிர கண்காணிப்பில் இருக்கும் கே.எல் ராகுல் விரைவில் குணமடைவார் என்றும், அதோடு அவரது முன்னேற்றத்தை பிசிசிஐ தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதனால் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் முதல் போட்டியை தவற விடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

அதோடு ஏற்கனவே பிசிசிஐ தரப்பில் வெளியான அறிக்கையில் : தேர்வுக்குழுவின் தலைவர் அஜித் அகார்கர் அளித்த பேட்டியில் : கே.எல் ராகுல் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்றும் நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் அவர் அணியுடன் இணைவார் என்று தெளிவான விளக்கம் ஒன்றினையும் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க : தேசிய விளையாட்டு தினம் 2023 ஸ்பெஷல் : இந்த ஆண்டு உலக கிரிக்கெட்டில் நடைபெற்ற டாப் 6 நிகழ்வுகள்

இதன் காரணமாக கே.எல் ராகுல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும் ஆசிய கோப்பை தொடர் முழுவதையும் அவர் ஒருவேளை தவறவிட்டால் நிச்சயம் அவருக்கு 50 ஓவர் உலகக்கோப்பைக்கான அணியிலும் இடம் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement