உலகக்கோப்பைக்கான இந்திய அணி ரெடி. சஞ்சு சாம்சன் உட்பட 3 வீரர்கள் நீக்கம் – பி.சி.சி.ஐ அதிரடி

Sanju-Samson
- Advertisement -

இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் தங்களது 15 பேர் கொண்ட அணி வீரர்களை பட்டியலை வெளியிட வேண்டும் என ஏற்கனவே ஐசிசி கெடு விதித்துள்ளது. இதன் காரணமாக அனைத்து நாடுகளுமே தங்களது அணிகளை சேர்ந்த வீரர்களின் பட்டியலை உறுதி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தற்போது எதிர்வரும் இந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை உறுதி செய்துள்ளதாக ஒரு தகவல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் மூலம் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் தேர்வுக்குழு தலைவரான அஜித் அகார்கர் இலங்கை சென்று இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு பின்னர் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோருடன் ஆலோசித்து உலகக் கோப்பை தொடருக்கான அணியை உறுதி செய்திருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த அணியில் காயம் காரணமாக நீண்ட இடைவெளிக்கு பின்னர் அணியில் இணைந்த கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், பும்ரா போன்ற வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதோடு முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

- Advertisement -

அதேபோன்று ஆல்ரவுண்டர்களாக ஹார்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் போன்றவரும் சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவும், வேகப்பந்து வீச்சார்களாக முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த உலககோப்பை அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனின் பெயர் தேர்வு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : உண்மையாகவே இயற்கை எய்திய ஜிம்பாப்வே ஜாம்பவான் ஹீத் ஸ்ட்ரீக் – உலக ரசிகர்கள், வீரர்கள் சோகம்

அவரோடு சேர்த்து பிரசித் கிருஷ்ணா மற்றும் திலக் வர்மா ஆகியோருக்கும் உலகக் கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியுடன் பயணித்துள்ள சஞ்சு சாம்சன், திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான அணியிலிருந்து கழட்டி விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement