உண்மையாகவே இயற்கை எய்திய ஜிம்பாப்வே ஜாம்பவான் ஹீத் ஸ்ட்ரீக் – உலக ரசிகர்கள், வீரர்கள் சோகம்

Heath Streak
- Advertisement -

ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் செப்டம்பர் 3ஆம் தேதி நம்முடைய 49 வயதில் இயற்கை எய்தியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1993ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக அசத்திய அவர் 90களின் இறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற டாப் அணிகளை ஜிம்பாப்வே தெறிக்க விட்டு சில மகத்தான வெற்றிகளை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

அதன் காரணமாக உலக அளவில் இருந்த ரசிகர்களின் அபிமான வீரராக உருவெடுத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மற்ற ஜிம்பாப்வே வீரர்கள் யாருமே 80 விக்கெட்டுகள் கூட எடுக்காத நிலைமையில் 216 விக்கெட்களை சாய்த்த பெருமைக்குரியவர். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 200+ விக்கெட்கள் மற்றும் 2000+ ரன்கள் எடுத்த ஒரே ஜிம்பாப்வே வீரர் என்ற மகத்தான சாதனையை படைத்த அவர் ஓய்வுக்கு பின் வங்கதேச அணியில் பயிற்சியாளராகவும் ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணியில் பயிற்சியாளராகவும் செயல்பட்டு விடை பெற்றார்.

- Advertisement -

ரசிகர்கள் சோகம்:
இருப்பினும் கடந்த சில வருடங்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தென்னாப்பிரிக்காவில் இருக்கும் ஜோகன்ஸ்பெர்க் நகரில் சிகிச்சைகளை எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகிறது. குறிப்பாக மோசமான உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் விரைவில் குணமடைந்து வர அனைவரும் பிரார்த்திக்குமாறு ஜிம்பாப்வே முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த நிலைமையில் கடந்த வாரம் அவர் இயற்கை எய்தியதாக மற்றொரு நட்சத்திரம் முன்னாள் ஜிம்பாப்வே வீரர் ஹென்றி ஒலாங்கா ட்விட்டரில் பதிவிட்டது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்த்தியது.

அதனால் வீரேந்திர சேவாக் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற நிறைய நட்சத்திரம் முன்னாள் இந்நாள் வீரர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் செய்திகளையும் வெளியிட்டனர். ஆனால் ஸ்ட்ரீக் நன்றாக இருப்பதாகவும் முன்பு வந்த செய்தி போலியானது என்றும் வாட்ஸப் செயலியில் நிகழ்த்திய உரையாடலை ஸ்கிரீன்ஷாட் எடுத்து மீண்டும் பதிவிட்ட ஒழுங்கா வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதனால் நிம்மதியடைந்த ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தங்களுடைய இரங்கல் செய்திகளை டெலிட் செய்து அவர் நன்றாக இருக்க வேண்டுமென வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

- Advertisement -

அத்துடன் போலியான செய்தியை வெளியிட்டவர்களால் தம்முடைய மனமுடைந்ததாக தெரிவித்த ஸ்ட்ரீக் தாம் நன்றாக இருப்பதாகவும் தற்போது குணமடைந்து வருவதாகவும் பேட்டி கொடுத்திருந்தார். அதே போல அவர் தம்முடைய வீட்டில் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. இந்நிலையில் ஹீத் ஸ்ட்ரீக் செப்டம்பர் 3ஆம் தேதி அதிகாலை இயற்கை எய்தியதாக அவருடைய மனைவி நாடின் ஸ்ட்ரீக் தம்முடைய பேஸ்புக் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

 இதையும் படிங்க: ராகுல் என்ன பெரிய கொம்பா? பெயரை பார்க்காம நாட்டை பாத்து அவருக்கு சான்ஸ் கொடுங்க – கைஃப்க்கு கம்பீர் பதிலடி, நடந்தது என்ன?

மேலும் தம்முடைய கணவரின் ஆன்மா சொர்க்கத்திற்கு சென்றிருக்கும் என்று நம்புவதாக அவர் சோகமாக பதிவிட்டுள்ளார். அதை அறிந்த ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் மீண்டும் சோகமடைந்து சமூக வலைதளங்களில் தங்களுடைய இரங்கல் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். குறிப்பாக 90களில் மிகச் சிறப்பாக விளையாடிய ஒரு நட்சத்திர வீரர் இவ்வுலகை விட்டு 49 வயதிலேயே பிரிந்துள்ளது ஒட்டுமொத்த உலக ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement