ராகுல் என்ன பெரிய கொம்பா? பெயரை பார்க்காம நாட்டை பாத்து அவருக்கு சான்ஸ் கொடுங்க – கைஃப்க்கு கம்பீர் பதிலடி, நடந்தது என்ன?

Gautam Gambhir 5
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதியா 2023 ஆசிய கோப்பையின் லீப் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. செப்டம்பர் 2ஆம் தேதி இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 48.5 ஓவர்கள் வரை மட்டுமே தாக்குப்பிடித்து 266 ரன்களை போராடி செய்தது. குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 66/4 என இந்தியாவை மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய இசான் கிசான் 82 ரன்களும் ஹர்டிக் பாண்டியா 87 ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினர்.

பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சாகின் அப்ரிடி 4 விக்கெட்டுகளை எடுத்த நிலையில் 226 ரன்களை துரத்திய அந்த அணியை மழை வந்து தடுத்ததால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. முன்னதாக பொதுவாகவே தொடக்க வீரராக விளையாடக்கூடிய இசான் கிசான் இந்த போட்டியில் காயமடைந்த ராகுலுக்கு பதிலாக மிடில் ஆர்டரில் களமிறங்கும் வாய்ப்பைப் பெற்று மிகச்சிறப்பாக விளையாடி தோனியின் சாதனையை சமன் செய்து இந்தியாவின் மானத்தை ஓரளவு மானத்தை காப்பாற்றி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார்.

- Advertisement -

கம்பீர் பாய்ச்சல்:
இருப்பினும் அவரைவிட அதிக அனுபவத்தை கொண்டுள்ள ராகுல் குணமடைந்துவிட்டால் 2023 உலகக் கோப்பை இந்திய அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் முகமது கைப் தெரிவித்தது பின்வருமாறு. “கேஎல் ராகுல் தன்னை நிரூபித்த மேட்ச் வின்னர். 5வது இடத்தில் அவருடைய புள்ளி விவரங்கள் சிறப்பாக இருக்கிறது. எனவே இப்போட்டியில் ஷமி நீக்கப்பட்ட நிலையில் கேஎல் ராகுல் ஃபிட்டாகும் பட்சத்தில் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெற வேண்டும். அதனால் இசானுக்கு இஷான் தம்முடைய வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்”

“அதே சமயம் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஹாட்ரிக் அரை சதங்கள் அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்து இஷான் கிசான் சிறப்பாக செயல்பட்டாலும் ராகுலுக்கு மாற்று வீரராக அவரால் இருக்க முடியாது” என்று கூறினார். இருப்பினும் நாட்டுக்காக கோப்பையை வெல்வதற்கு பெரிய பெயரைக் கொண்டுள்ள கேஎல் ராகுலை தேர்வு செய்யாமல் இஷான் கிசான் போல யார் நல்ல ஃபார்மில் இருக்கிறார் என்பதை பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டுமென அவருக்கு கௌதம் கம்பீர் பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உலகக்கோப்பை வெல்வதற்கு ஃபார்ம் அல்லது பெயர் ஆகியவற்றில் எது முக்கியம்? இதுவே அந்த 4 தொடர்ச்சியான அரை சதங்களை ரோகித் அல்லது விராட் அடித்திருந்தால் ராகுல் பற்றி சொன்னதைப் போல் நீங்கள் சொல்லியிருப்பீர்களா? எனவே உலகக்கோப்பை வெல்வதற்கு நீங்கள் தயாராகும் போது பெயரை பார்க்காமல் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுக்கும் அளவுக்கு யார் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள் என்பதையே பார்க்க வேண்டும்”

இதையும் படிங்க: வீடியோ : என் தம்பியவா முறைக்கிறா? இஷான் கிஷானை மிரட்டிய ஹரிஷ் ரவூஃபுக்கு – 4, 4, 4.. பேட்டிங்கில் மாஸ் பதிலடி கொடுத்த பாண்டியா

“இந்த சூழ்நிலையில் உலகக் கோப்பைக்கு தேர்வாக இஷான் கிசான் தம்மால் முடிந்த அனைத்து செயல்பாடுகளையும் வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் ராகுலை விட அவர் அதிக போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதாலேயே இப்படி நாம் பேசுகிறோம். எனவே ராகுல் மேட்ச் வின்னராக இருந்தாலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்த அழுத்தமான போட்டியில் அசத்திய இசான் கிசான் இந்திய அணியில் விளையாடுவதற்கு தகுதியானவர்” என்று கூறினார்.

Advertisement