நமக்கு நேரமே இல்ல.. எல்லாத்துக்கும் ரெடியா இருங்க.. இந்திய வீரர்களை அறிவுறுத்திய டிராவிட்

Rahul Dravid 3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி 2024 புத்தாண்டில் தங்களுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக நடைபெறும் இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் விளையாடுகின்றனர்.

அவர்களுடன் ரிங்கு சிங், திலக் வர்மா, ஜெய்ஸ்வால் போன்ற நிறைய இளம் வீரர்களும் களமிறங்க உள்ளனர். ஆனால் பும்ரா போன்ற 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவார்கள் என்று கருதப்படும் சில முக்கியமான வீரர்கள் இத்தொடரில் விளையாடவில்லை. அதை விட இந்தியா இந்த தொடரில் மட்டுமே விளையாடிவிட்டு அடுத்ததாக 2024 டி20 உலகக் கோப்பையில் நேரடியாக களமிறங்குகிறது.

- Advertisement -

தயாரா இருங்க:
அதனால் இந்தியா எப்படி முழுமையாக தயாராகி 2024 டி20 உலகக் கோப்பையில் களமிறங்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் 2022 டி20 உலகக் கோப்பைக்கு முழுமையாக தயாராவதற்கான நேரம் தங்களுக்கு இல்லை என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். எனவே அனைத்து இந்திய வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாடி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அசத்துவதற்கு தேவையான வளைவுத் தன்மையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் டிராவிட் கூறியுள்ளார்.

இது பற்றி முதல் போட்டிக்கு முன்பாக அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த டி20 உலகக் கோப்பைக்கு பின் நாங்கள் ஒருநாள் நாக கோப்பைக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். ஆனால் 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு பின் தற்போது எங்களுக்கு நிறைய டி20 போட்டிகள் இல்லை. எனவே இந்த டி20 உலகக் கோப்பை சற்று வித்தியாசமாக இருக்கப் போகிறது. அதாவது இதற்கு தயாராவதற்கு போதுமான நேரம் இல்லை”

- Advertisement -

“அதற்காக உங்களுக்கு கிடைக்கும் கிரிக்கெட்டையும் ஐபிஎல் தொடரை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. எனவே நாங்கள் ஒன்றாக விளையாடுவதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கப் போவதில்லை. அதனால் நீங்கள் எந்த சூழ்நிலைக்கும் வளைந்து கொடுத்து உட்படுத்திக்கொள்ள வேண்டும். கடந்த ஒருநாள் உலகல் கோப்பைக்கு தயாராக எங்களுக்கு நிறைய நேரம் இருந்தது”

இதையும் படிங்க: ஒன்றரை வருடம் கழித்து வரும் ஹிட்மேன்.. இயன் மோர்கனை முந்தி.. படைக்கப் போகும் 3 உலக சாதனைகள்

“சொல்லப்போனால் கடந்த டி20 உலகக் கோப்பைக்கு முன்பாகவும் எங்களுக்கு நிறைய போட்டிகள் இருந்தது. இருப்பினும் இம்முறை எங்களுக்கு அதிக போட்டிகள் கிடைக்கவில்லை. எனவே அவை அனைத்தும் அடுத்து வரும் போட்டிகளில் எங்களை எப்படி உட்படுத்திக் கொள்கிறோம் என்பதை பொறுத்தது. பும்ரா, சிராஜ் ஆகியோர் அடுத்ததாக நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டு இத்தொடரில் விளையாடவில்லை. இது போல தான் நாங்கள் கடந்த 2 வருடங்களாக சற்று வேடிக்கையாக விளையாடி வருகிறோம்” என்று கூறினார்.

Advertisement