ஒன்றரை வருடம் கழித்து வரும் ஹிட்மேன்.. இயன் மோர்கனை முந்தி.. படைக்கப் போகும் 3 உலக சாதனைகள்

Rohit Sharma 2
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. ஜனவரி 11ஆம் தேதி துவங்கும் இந்த தொடரில் சற்று கத்துக் குட்டியாக பார்க்கப்படும் ஆப்கானிஸ்தானை தங்களுடைய சொந்த மண்ணில் வலுவான இந்தியா தோற்கடித்து கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

கடைசியாக 2022 டி20 உலகக் கோப்பையில் விளையாடியிருந்த ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்த தொடரில் விளையாடுவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஹர்திக் பாண்டியா காயத்தை சந்தித்து வெளியேறியுள்ள நிலையில் ரோகித் சர்மா இத்தொடரில் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் 2024 டி20 உலகக் கோப்பையிலும் அவரே இந்திய அணியை தலைமை தாங்குவதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாகியுள்ளது.

- Advertisement -

திரும்பும் ஹிட்மேன்:
அந்த வகையில் ஒன்றரை வருடம் கழித்து இத்தொடரில் களமிறங்கும் ரோகித் சர்மா படைக்கப் போகும் சில சாதனைகளை பற்றி பார்ப்போம். முதலாவதாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா இதுவரை 148 போட்டிகளில் விளையாடியுள்ளார். எனவே இத்தொடரில் இன்னும் 2 போட்டிகளில் விளையாடும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற உலக சாதனையை ரோகித் சர்மா படைப்பார்.

2வதாக ரோகித் சர்மா இதுவரை விளையாடிய 148 போட்டிகளில் 99 முறை இந்தியா வெற்றிகளை பதிவு செய்துள்ளது. எனவே இத்தொடரில் இன்னும் 1 வெற்றியை பதிவு செய்யும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி வெற்றி பெற்ற 100 போட்டிகளில் அங்கமாக இருந்த முதல் வீரர் என்ற தனித்துவமான உலக சாதனையும் ரோகித் சர்மா படைப்பார். ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக இந்த பட்டியலில் சோயப் மாலிக் பாகிஸ்தான் பதிவு செய்த 86 வெற்றிகளில் ஒரு அங்கமாக இருந்து 2வது இடத்தில் உள்ளார்.

- Advertisement -

3வதாக இதுவரை 148 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா மொத்தமாக 182 சிக்சர்கள் அடித்துள்ளார். இந்த 182இல் 82 சிக்ஸர்களை இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா அடித்துள்ளார். அந்த சூழ்நிலையில் இந்த தொடரில் இன்னும் 5 சிக்சர்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த கேப்டன் என்ற இங்கிலாந்தின் இயான் மோர்கன் சாதனையை உடைத்து ரோகித் சர்மா புதிய உலக சாதனை படைப்பார்.

இதையும் படிங்க: அந்த காரணத்தால் புதிய வாழ்க்கை கிடைச்சுருக்கு.. இதை விட்றாதீங்க.. சஞ்சுவை வாழ்த்திய சபா கரீம்

தற்போது வரை இயன் மோர்கன் 86 சிக்சர்கள் அடித்து உலகிலேயே அதிக சிக்சர்கள் அடித்த கேப்டனாக முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் மற்றும் இந்தியாவும் ரோஹித் சர்மா ஆகியோர் தலா 82 சிக்ஸர்களுடன் 2வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement