ஆசியக்கோப்பை : இறுதிப்போட்டிக்கு தகுதிபெற இந்திய அணி என்ன செய்யவேண்டும்? – சேன்ஸ் இருக்கா?

Asia-Cup
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் பங்களாதேஷ் மற்றும் ஹாங்காங் அணிகளை தவிர்த்து மீதமுள்ள நான்கு அணிகளும் “சூப்பர் 4” சுற்றுக்கு தகுதி பெற்றனர். இந்த “சூப்பர் 4” சுற்றின் முக்கியமான இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணியை பாகிஸ்தான அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியிருந்தது.

IND vs PAk Rahul Hardik Pandya

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணி அடுத்ததாக இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை சந்திக்க இருக்கும் வேளையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்ல வாய்ப்பு இருக்குமா? என்பதே ரசிகர்கள் பலரின் கேள்வியாக உள்ளது. அதற்கான விளக்கத்தை தான் இந்த பதிவில் நாங்கள் தொகுத்து வழங்க உள்ளோம். அதன்படி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி செல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

ஏனெனில் இந்திய அணி அடுத்ததாக இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் தான் மோத இருக்கிறது. இந்த இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் நான்கு புள்ளிகளுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேற ஒரு வாய்ப்பு உள்ளது. மேலும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரண்டு அணிகளுமே தலா ஒரு வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் தற்போது முன்னிலை வகிக்கின்றனர்.

India Virat Kohli Rohit Sharma Bhuvanewar Kumar Dinesh Karthik

அவர்கள் மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட நான்கு புள்ளிகளுடன் இறுதி போட்டிக்கு செல்ல தயாராக இருப்பார்கள். அதே வேளையில் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றால் எந்தவித சந்தேகமும் இன்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடுவார்கள். எனவே பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியானது விளையாட இருக்கும் 2 போட்டிகளில் ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்தே ஆக வேண்டும்.

- Advertisement -

அப்படி இரு அணிகளும் ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்து அதேவேளையில் இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு போட்டிகளையும் கைப்பற்றினால் 3 அணிகளுமே தலா நான்கு புள்ளிகளை பெறும். இப்படி மூன்று அணிகளும் நான்கு புள்ளிகளோடு இருக்கும் வேளையில் ரன் ரேட் முறை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ரன் ரேட்டின் அடிப்படையிலேயே இறுதிப்போட்டிக்கு செல்லும் அணிகள் முடிவு செய்யப்படும்.

இதையும் படிங்க : IND vs PAK : அந்த குருட்டுத்தமான ஷாட் தேவையா? – ரிஷப் பண்ட்டை வெளுக்கும் 3 ஜாம்பவான்கள் வீரர்கள்

தற்போது வரை இந்திய அணி ரன் ரேட்டில் பின்தங்கி இருந்தாலும் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் நிச்சயம் இந்திய அணி ரன் ரேட்டின் அடிப்படையில் இறுதி போட்டிக்கு செல்ல ஒரு வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement