IND vs PAK : அந்த குருட்டுத்தமான ஷாட் தேவையா? – ரிஷப் பண்ட்டை வெளுக்கும் 3 ஜாம்பவான்கள் வீரர்கள்

Rishabh Pant
- Advertisement -

துபாயில் செப்டம்பர் 4ஆம் தேதியன்று நடைபெற்ற 2022 ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டியில் பாகிஸ்தானிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா போராடி தோல்வியடைந்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 4 பவுண்டரி 1 சிக்சருடன் 60 (44) ரன்கள் விளாசி தனது விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். அதை துரத்திய பாகிஸ்தானுக்கு கேப்டன் பாபர் அசாம் 14, பக்கார் ஜமான் 15 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடைவை ஏற்படுத்தினர்.

IND vs PAk Rahul Hardik Pandya

- Advertisement -

இருப்பினும் 3வது விக்கெட்டுக்கு அதிரடியாக 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் வெற்றியை உறுதிசெய்த முகமது நவாஸ் 42 ரன்களும் தொடக்க வீரர் முஹம்மது ரிஸ்வான் 71 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தார்கள். இறுதியில் ஆசிப் அலி 16 ரன்களும் குஷ்தில் ஷா 14* ரன்களும் குவித்து வெற்றி பெற வைத்தனர். அதனால் லீக் சுற்றில் தோல்வியை பரிசளித்த இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்த பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றை வெற்றியுடன் துவக்கியுள்ளது. மறுபுறம் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் கடைசி நேரங்களில் சொதப்பிய இந்தியா பரம எதிரியிடம் தலைகுனியும் தோல்வியை சந்தித்து எஞ்சிய போட்டியில் வென்றால் மட்டுமே பைனலுக்கு செல்ல முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சொதப்பிய பண்ட்:
முன்னதாக இப்போட்டியின் இறுதியில் இந்தியாவின் தோல்விக்கு 15 – 20 ரன்கள் குறைவாக எடுத்தது முக்கிய பங்காற்றியது. அந்த நிலையில் 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த தினேஷ் கார்த்திக் 16 – 20 வரையிலான கடைசி கட்ட ஓவர்களில் அதிரடியாக விளையாடி அதுபோன்ற கணிசமான ரன்கள் எடுக்கும் திறமை பெற்று நல்ல பார்மில் இருக்கிறார். ஆனாலும் இப்போட்டியில் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கையுடன் அவரை நீக்கிய கேப்டன் ரோகித் சர்மா வாய்ப்பு கொடுத்த ரிஷப் பண்ட் மீண்டும் சுமாராக செயல்பட்டு 14 (12) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

DK and Pant

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடிய தோனியும் மிஞ்சிய சாதனைகளை படைத்துள்ளார் என்பதற்காக டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியான வாய்ப்புகளைப் பெற்று வரும் ரிஷப் பண்ட் நேற்றைய போட்டியும் சேர்த்து இதுவரை 56 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்பை பெற்றுள்ளார்.

- Advertisement -

ஆனால் அதில் ஒரு முறை கூட ஆட்டநாயகன் விருது வெல்லும் அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை. அதைவிட பெரும்பாலான போட்டிகளில் குருட்டுத்தனமான ஷாட்டை அடித்து அவுட்டாகி செல்பவராக இருக்கும் அவர் நேற்று 9.4 ஓவரில் 91/3 என்ற நல்ல நிலைமையில் இருந்த போது களமிறங்கி தேவையின்றி 14வது ஓவரில் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் அடித்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

Gambhir

தேவையற்ற ஷாட்:
ஆனால் அந்த தருணத்தில் அது தேவையற்ற ஷாட் என்று தெரிவிக்கும் முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் அந்த ஷாட் உங்களுடைய பலமும் கிடையாது என்று விமர்சித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் மிகவும் வருத்தமாக இருப்பார். ஏனெனில் அது அவருடைய ஷாட் கிடையாது. பொதுவாக அவர் லாங் ஆன் திசைக்கு மேல் அல்லது டீப் மிட் விக்கெட் திசையில் அடிக்கக் கூடியவர். ஆனால் இந்த ஷாட்டை அந்த இடத்தில் அடிக்க முயற்சித்து வழக்கம்போல அவுட்டானார். ரிவர்ஸ் ஸ்வீப் உங்களது பலம் கிடையாது என்பதை புரிந்து செயல்படுங்கள்” என்று கூறினார்.

- Advertisement -

அதே போல் அவருடன் பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் இது பற்றி கூறியது பின்வருமாறு. “நீங்கள் சொல்வது சரி கவுதம். குறிப்பாக போட்டியின் அந்த தருணத்தில் அந்த ஷாட் அடிப்பதற்கான தேவையில்லை. அதை அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடிப்பார் என்று எனக்கு தெரியும். தற்சமயத்தில் உலகில் அவர் டாப் வீரர்களில் ஒருவர் என்றும் எனக்கு தெரியும். ஆனால் அழுத்தமே இல்லாத அந்த தருணத்தில் அந்த ஷாட் தேவையற்றது” என்று கூறினார்.

இதையும் படிங்க : IND vs PAK : அர்ஷ்தீப் சிங்கால் தப்பித்த சீனியர் வீரர். இல்லனா அவரும் நல்லா சிக்கியிருப்பாரு – இதை கவனிசீங்களா?

இது பற்றி மற்றொரு முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி பேசியது பின்வருமாறு. “இப்போட்டியின் ஆரம்பத்தில் ரோகித், ராகுல் ஆகியோர் மைதானத்தின் “வி” திசையில் அடித்தனர். மேலும் பிட்ச் பேட்டிங்க்கு சாதகமாக இருந்ததற்காக மைதான பராமரிப்பாளர்களுக்கு தலை வணங்குகிறேன். பேட்டில் மாட்டினால் ரிஷப் பண்ட்க்கு எவ்வளவு பெரிய மைதானமும் போதாது. அதுவே அவருடைய பலமாகும். அந்த வகையில் இந்த விஷயத்தில் உங்களுளது கருத்துக்களை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறினார்.

Advertisement