2023 உலககோப்பை அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்ய இன்னும் இந்தியா எத்தனை போட்டிகளில் ஜெயிக்கனும் – விவரம் இதோ

IND
- Advertisement -

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கிய 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் 48 போட்டிகளில் அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு விளையாட உள்ளதால் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. அதோடு தற்போது இந்த தொடரானது முதல் வாரத்தினை கடந்து இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு போட்டியில் மோதுகின்ற வேளையில் முழுவதுமாக 45 லீக் போட்டிகள் முடிவடைந்த பின்னர் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அறையிறுதிக்கு முன்னேறும். எனவே இந்த தொடரின் அரையிறுதிக்கு முன்னேறப்போகும் அந்த நான்கு அணிகள் எது? என்கிற எதிர்பார்ப்பு தற்போதே அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் தற்போது இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் விளையாடுவதால் நிச்சயம் அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்யும் என்று ரசிகர்கள் அனைவரும் தங்களது நம்பிக்கையை தெரிவித்து வருகின்றனர்.

இவ்வேளையில் இந்திய அணியும் ரசிகர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த வகையில் பிரமாண்டமாக நடைபெற்று வரும் இந்த 13-வது ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக மிகச்சிறப்பான வெற்றியைப் பெற்றது.

- Advertisement -

இதன்மூலம் தற்போது இந்திய அணியானது 1.812 என்கிற ஆரோக்கியமான ரன் ரேட்டுடன் 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தினை பிடித்துள்ளது. இந்நிலையில் மீதமுள்ள போட்டிகளில் இந்திய அணி எத்தனை போட்டிகளில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் என்பது குறித்த தெளிவான தகவலை இங்கு நாங்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கி உள்ளோம்.

அந்த வகையில் இந்திய அணி இந்த தொடரில் ஏற்கனவே மூன்று போட்டியில் விளையாடி முடித்த வேளையில் மீதம் 6 போட்டிகள் கைவசம் இருக்கின்றன. அதில் வங்கதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளை இந்திய அணி எதிர்கொள்ள இருக்கிறது.

இதையும் படிங்க : இந்தியாவை குறை சொல்லி எஸ்கேப் ஆகாதீங்க.. குல்தீபை அட்டாக் பண்ண ப்ளானை சொல்லுங்க.. ஆர்தரை விளாசிய வாசிம் அக்ரம்

இந்த ஆறு போட்டிகளில் குறைந்தது 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட இந்திய அணி 14 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக இந்திய அணியானது வரும் அக்டோபர் 17-ஆம் தேதி புனேவில் வங்கதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement