IND vs NEP : பாகிஸ்தானை விட இந்தியா வீக் தான் போல. இதுலயே நல்லா தெரியுது – என்ன ஆகப்போகுதோ?

IND-vs-PAK
- Advertisement -

இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இலங்கை நாட்டில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் நாளை செப்டம்பர் 5-ஆம் தேதி உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கும் வேளையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை தொடரில் நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி இன்று விளையாடி வருகிறது.

ஏற்கனவே உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்? என்கிற கேள்வி அதிகம் இருந்து வரும் வேளையில் தற்போது நேபாள் அணிக்கு எதிராகவே இந்திய அணியின் பவுலிங் யூனிட் தடுமாற்றத்தை சந்தித்துள்ளது அப்பட்டமாக தெரியவந்துள்ளது.

- Advertisement -

சமீபகாலத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு பலமான ஒன்று என்று பலரும் பேசி வரும் வேளையில் இன்று நேபாள் அணிக்கு எதிராகவே இந்திய அணியின் பந்துவீச்சு சுமாராகவே இருந்துள்ளது. ஏனெனில் இந்த தொடரில் ஏற்கனவே நேபாள் அணிக்கு எதிராக விளையாடிய பாகிஸ்தான் அணி அவர்களை 24 ஓவர்கள் கூட பேட்டிங் செய்ய விடாமல் போட்டியின் ஆரம்பத்திலேயே சுருட்டி வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றது.

ஆனால் இன்று இந்திய அணிக்கு எதிராக விளையாடி வரும் நேபாள் அணி இந்திய அணியின் பவுலர்களை எளிதாக கையாண்டு கிட்டத்தட்ட தற்போது வரை 38 ஓவர்கள் வரை பேட்டிங் செய்து விட்டது. இன்னும் 12 ஓவர்கள் ஓவர்கள் எளிதில் பேட்டிங் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

இப்படி கத்துக்குட்டி அணியான நேபாள் அணியை கூட ஆல் அவுட் செய்து சுருட்ட முடியாத இந்திய அணியின் பவுலிங் வீக்னஸ் இந்த போட்டியின் மூலம் தெரிய வந்துள்ளது. முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், ஹார்டிக் பாண்டியா என தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தும் அவர்களை சுருட்டாதது உண்மையிலேயே நம் பவுலிங்கில் உள்ள வீக்னஸை வெளிக்காட்டுகிறது.

இதையும் படிங்க : IND vs NEP : போனமுறை செய்த தப்பை இந்தமுறை பண்ணல. டாசுக்கு பிறகு – ரோஹித் சர்மா எடுத்த முடிவு

அதேவேளையில் பாகிஸ்தான் அணியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்திய அணியை பொறுத்தவரை ஒரு போட்டியில் நன்றாகவும், ஒரு போட்டியில் சற்று சுமாராகவும் செயல்பட்டு வருவது தொடர் கதையாகி உள்ளது. எனவே உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு எவ்வாறு இருக்கப் போகிறது? என்கிற கேள்வி இப்போதே எழுந்து ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement