IND vs NEP : போனமுறை செய்த தப்பை இந்தமுறை பண்ணல. டாசுக்கு பிறகு – ரோஹித் சர்மா எடுத்த முடிவு

Rohit-NEP-Toss
Advertisement

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்ரு விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 266 ரன்கள் குவிந்திருந்த வேளையில் மழை குறுக்கிட்டது. காரணமாக இரண்டாவது இன்னிங்ஸ் நடைபெறாமல் இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி வழங்கப்பட்டு போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது போட்டியாக இந்திய அணி இன்று நேபாள் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. அதன்படி பல்லகல்லே மைதானத்தில் துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.

- Advertisement -

சென்ற போட்டியின் போது வானிலை அறிக்கை சொன்னதையும் மீறி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த ரோகித்தின் முடிவு தவறானது என்று விமர்சனங்கள் இருந்த வேளையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு உள்ளதால் டாஸ் வென்ற ரோஹித் முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தார்.

பின்னர் டாசிற்கு பிறகு பேசிய ரோஹித் சர்மா கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியில் முதலில் பந்து வீசவே விரும்புகிறோம். இதற்கு வேறு எந்த காரணமும் கிடையாது. கடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து விட்டோம். இந்த போட்டியில் பந்துவீச்சாளர்கள் எவ்வாறு செயல்பட போகிறார்கள் என்பதை எதிர்பார்த்தே இந்த முடிவை எடுத்துள்ளேன்.

- Advertisement -

இன்றைய நாளின் வானிலை அறிக்கை பற்றி நான் பெரிதாக யோசிக்கவில்லை. பவுலர்கள் எப்படி செயல்பட போகிறார்கள் என்பதை யோசித்து மட்டுமே இந்த முடிவை எடுத்துள்ளேன். கடந்த போட்டியில் இஷான் கிஷன் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக விளையாடினர். அவர்களது ஆட்டம் இந்திய அணிக்கு நல்ல ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது.

இதையும் படிங்க : வீடியோ : இங்கயும் சொதப்பலா? 20 பந்தில் 3 அல்வா கேட்ச்களை கோட்டை விட்ட இந்திய வீரர்கள் – தக்க பதிலடி கொடுத்த நேபாள்

இந்த போட்டியும் ஒரு முக்கியமான போட்டி தான். பும்ரா அணியில் இல்லாததால் முகமது ஷமி உள்ளே வந்துள்ளார் என ரோகித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement