ஒரு வழியாக 15 பேர் கொண்ட ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்த பி.சி.சி.ஐ – முழுலிஸ்ட் இதோ

Asia-Cup
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக நீண்ட தொடரினை விளையாடி முடித்துள்ளது. முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரினை அடுத்து அடுத்தடுத்த சுற்றுப் பயணங்களில் இருக்கும் இந்திய அணியானது இம்மாத இறுதியில் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருப்பதினால் இந்த ஆசிய கோப்பை தொடரானது இந்திய அணிக்கு முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மேலும் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறும் வீரர்கள் பலரும் டி20 உலக கோப்பை தொடருக்கான அணியில் இடம் பிடிப்பார்கள் என்பதனால் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு மீது பல்வேறு தரப்பிலும் இருந்தும் எதிர்பார்ப்புகள் அதிகரித்து இருந்தது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ தங்களது டிவிட்டர் பக்கத்தின் வாயிலாக ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது. அதில் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக கே.எல் ராகுலும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக சற்று ஓய்வில் இருந்த விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

- Advertisement -

அதேபோன்று இந்த தொடருக்கான இந்திய அணியின் பேட்ஸ்மேன்களாக சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் ஆல்ரவுண்டர்களாக ஹார்டிக் பாண்டியா மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களை தவிர்த்து சுழற்பந்து வீச்சாளர்களாக அஷ்வின், சாஹல், ரவி பிஷ்னாய் ஆகியோரும், வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : வருங்காலத்தில் அதுவும் நடந்தால் நான் இன்னும் ஹேப்பியா இருப்பேன் – ஹார்டிக் பாண்டியா மகிழ்ச்சி

ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இதோ : 1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) தீபக் ஹூடா, 6) ரிஷப் பண்ட், 7) தினேஷ் கார்த்திக், 8) ஹார்டிக் பாண்டியா, 9) ரவீந்திர ஜடேஜா, 10) ரவிச்சந்திரன் அஷ்வின், 11) யுஸ்வேந்திர சாஹல், 12) ரவி பிஷ்னாய், 13) புவனேஷ்வர் குமார், 14) அர்ஷ்தீப் சிங், 15) ஆவேஷ் கான்

Advertisement