வருங்காலத்தில் அதுவும் நடந்தால் நான் இன்னும் ஹேப்பியா இருப்பேன் – ஹார்டிக் பாண்டியா மகிழ்ச்சி

Pandya-2
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட காயம் காரணமாக முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே பந்து வீசாமல் இருந்து வந்தார். அதோடு அவரது பேட்டிங் பார்மும் மோசமாக மாற கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் அவரது இடமானது இந்திய அணியில் இக்கட்டான நிலையில் சிக்கியது. அந்த வேளையில் பாண்டியாவும் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வு எடுத்துக் கொண்டதால் இனி அவரது இடம் காலிதான் என்று அனைவராலும் பேசப்பட்டது.

ஆனால் தனது விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பினால் மீண்டும் கம்பேக் கொடுத்த பாண்டியா காயத்திலிருந்து முற்றிலுமாக வெளியேறி ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசியது மட்டுமின்றி கேப்டனாகவும் குஜராத் அணிக்கு முதல் முறையாக கோப்பையை வென்று கொடுத்தார்.

- Advertisement -

இப்படி தனது சிறப்பான கம் பேக் மூலம் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்த பாண்டியா தற்போது பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அசத்தி வரும் வேளையில் அவ்வப்போது கேப்டன்சியும் செய்து வருகிறார். அந்த வகையில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டி20 போட்டியில் ரோகித் ஓய்வெடுத்துக் கொண்டதன் காரணமாக அணியின் கேப்டனாக செயல்பட்ட பாண்டியா இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று கொடுத்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரை இந்திய அணியில் சேர்க்கப்படுவாரா என்று யோசிக்கப்பட்ட வேளையில் தான் மீண்டும் ஒரு தரமான ஆல் ரவுண்டர் என்பதை நிரூபித்து அணியின் கேப்டனாகும் அளவிற்கு பாண்டியா உயர்ந்துள்ளது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டிக்குப் பின்பு பாண்டியாவிடம் இந்திய அணியின் வருங்கால கேப்டனாக முழு நேரமாக பணியாற்ற உங்களுக்கு விருப்பமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த பாண்டியா கூறுகையில் : நிச்சயம் விருப்பப்படுகிறேன். இந்திய அணியின் கேப்டனாகும் வாய்ப்பு தேடி வந்தால் அதனை வேண்டாம் என்று யாராவது கூறுவார்களா?

இதையும் படிங்க : சிறந்த குரு சிஷ்யனாக எம்எஸ் தோனி – ரிஷப் பண்ட் நடந்துகொண்ட 5 தருணங்கள் – லிஸ்ட் இதோ

என்னை பொறுத்தவரை வருங்காலத்தில் அப்படி ஒரு வாய்ப்பு என்னை தேடி வந்தால் நிச்சயம் மகிழ்ச்சியாக அதை ஏற்றுக் கொண்டு இந்திய அணியை வழிநடத்துவேன் என்று பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement