சிறந்த குரு சிஷ்யனாக எம்எஸ் தோனி – ரிஷப் பண்ட் நடந்துகொண்ட 5 தருணங்கள் – லிஸ்ட் இதோ

dhoni with pant
- Advertisement -

நட்சத்திர முன்னாள் வீரர் எம்எஸ் தோனி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாக போற்றப்படுகிறார். கடந்த 2004இல் அறிமுகமாகி அதிரடியான விக்கெட் கீப்பிங் மின்னல்வேக ஸ்டம்பிங் போன்றவற்றால் நிரந்தர விக்கெட் கீப்பராக இடம்பிடித்த அவர் 2007இல் அனுபவமில்லாத கேப்டன்சிப் பொறுப்பில் அனைத்து வீரர்களையும் அற்புதமாக வழிநடத்தி முதல் தொடரிலேயே பரம எதிரியான பாகிஸ்தானை தோற்கடித்து உலக கோப்பையை வென்று கொடுத்தார். அதன்பின் 2011, 2013 ஆகிய வருடங்களில் நடந்த ஐசிசி உலகக் கோப்பைகளையும் வென்ற அவர் தோற்க வேண்டிய நிறைய போட்டிகளில் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக செயல்பட்டு வெற்றிகளை பெற்றுக்கொடுத்த பினிஷராகவும் போற்றப்படுகிறார்.

நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து இந்திய கிரிக்கெட்டின் வருங்காலத்தை சிறப்பாக கட்டமைத்த அவர் இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்து பிடித்து போடுபவர்களாக மட்டுமில்லாமல் அதிரடியாக ரன்களையும் எடுக்க வேண்டும் என்ற அடிப்படை இலக்கணத்தை மாற்றிய பெருமைக்குரியவர். அப்படிப்பட்ட அவருக்குப் பின் அவரைப் போன்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிடைப்பாரா என்று கவலையடைந்த இந்திய ரசிகர்களுக்கு அவர் இருக்கும்போதே அறிமுகமாகி அவர் ஓய்வு பெற்றப்பின் அசத்தலாக செயல்படத் துவங்கியுள்ள ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரையும் மிஞ்சி தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் சதமடித்து சாதனை படைத்து வருகிறார்.

- Advertisement -

குரு சிஷ்யன்:
இந்திய கிரிக்கெட்டில் மகத்தானவராக போற்றப்படும் எம்எஸ் தோனியை நிறைய இளம் வீரர்கள் தங்களது ரோல் மாடல்களாக கொண்டு விளையாடுகிறார்கள். அந்த வகையில் என்னுடைய ரோல் மாடல் எம்எஸ் தோனி தான் என்று பலமுறை வெளிப்படையாக பேசி வரும் ரிஷப் பண்ட் அதை வாய் வார்த்தையாக இல்லாமல் நிறைய தருணங்களில் செய்தும் காட்டியுள்ளார். அதைப் பற்றி பார்ப்போம்:

5. ஜெர்ஸி நம்பர்: எம்எஸ் தோனியின் ஜெர்சி நம்பர் 7 என்ற எண் ரசிகர்களிடம் மிகவும் புகழ்பெற்றுள்ள நிலையில் அவரைப்போலவே விளையாட வேண்டும் என்று நினைக்கும் ரிஷப் பண்ட் ஆரம்ப காலங்களில் 77, 777 என்ற அவரது எண்களை தனது ஜெர்சியில் பயன்படுத்தினார்.

- Advertisement -

தற்போதும் 17 என்ற நம்பரை பயன்படுத்தும் அவர் தோனியை குருவாக நினைத்து அவருடைய ஜெர்சி நம்பரை எப்போதும் தனது உடையில் அணிந்து விளையாடுகிறார்.

4. குருவின் ஆலோசனை: எம்எஸ் தோனிக்கு பின் அவரது இடத்தில் விளையாடத் தொடங்கிய ரிஷப் பண்ட் ஆரம்ப காலங்களில் ஸ்டம்பிங், பேட்டிங் என அனைத்திலும் மொத்தமாக சொதப்பினார். அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த அவர் ஒரு கட்டத்தில் நேராக தனது குருவான தோனியின் வீட்டுக்குச் சென்று அவருடன் நேரத்தை செலவிட்டு அவரின் ஆலோசனைகளை பெற்றார்.

- Advertisement -

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தோனியின் ஆலோசனைகளை பின்பற்ற தொடங்கிய அவர் சமீப காலங்களில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டு நம்பர் 1 விக்கெட் கீப்பராக உருவெடுத்துள்ளார்.

3. குருவுக்கு வாழ்த்து: தோனியை பின்பற்றுவது மட்டுமல்லாமல் அவர் மீதும் அவரது குடும்பத்தின் மீதும் எப்போதும் தனி பாசம் வைத்துள்ள ரிஷப் பண்ட் நிறைய தருணங்களில் அவரின் குழந்தை ஜிவாவுடன் கொஞ்சி மகிழ்ந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

- Advertisement -

மேலும் ஒவ்வொரு வருடமும் அவரின் பிறந்த நாளுக்கும் முடிந்தவரை நேரில் சென்று வாழ்த்து தெரிவிக்கும் ரிஷப் பண்ட் இந்த வருடம் லண்டனில் தோனி பிறந்தநாளை கொண்டாடிய போது அந்த நிகழ்ச்சியில் ஒரே இந்திய வீரராக பங்கேற்று அவருக்கு நேரில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

4. குருவிடம் சேட்டை: இந்த நவீன யுகத்தில் தோனியை போன்ற நட்சத்திர அந்தஸ்துடைய அனைவரும் சமூக வலைதளங்களில் தினம்தோறும் ஏதாவது பதிவிடுகிறார்கள். ஆனால் அவர் மட்டும் சமூக வலைதளங்களில் இருந்தும் கடந்த 2015க்குப்பின் உலகில் எது நடந்தாலும் எந்த பதிவுகளையும் போடுவது கிடையாது.

அதனால் சமீப காலங்களில் தோனியை சமூக வலைதளங்களில் பார்க்கவே முடியாத ரசிகர்களுக்கு சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோகித் சர்மா, சூரியகுமார் ஆகியோரை வைத்து கொண்டு லைவ் வீடியோ கால் செய்த ரிஷப் பண்ட் அவரை லைவ் வீடியோவில் வர வைத்தார். இன்ஸ்டாகிராம் பக்கமே வராதே அவரை உரிமையுடன் வீடியோ காலில் ரிஷப் பண்ட் வரவைத்தது ஒருநாள் முழுவதும் இந்திய அளவில் ட்ரெண்ட்டானது.

5. சிஷ்யனின் ரசிகன்: இப்படி தன் மீது பாசமும் தன்னைப் பின்பற்றும் ரிஷப் பண்ட் மீது எப்போதும் அக்கறை வைத்துள்ள எம்எஸ் தோனி சமீபத்தில் நடந்த இங்கிலாந்து தொடரின் போது லண்டனில் தனது பிறந்தநாளை முடித்து விட்டு இந்தியா பங்கேற்ற போட்டிகளில் நேரில் சென்று ஆதரவளித்தார்.

இதையும் படிங்க : IND vs WI : முதல் ஓவரையே அக்சர் பட்டேலுக்கு வீச வழங்க காரணம் இதுதான் – ஹார்டிக் பாண்டியா ஓபன்டாக்

அப்போது பர்மிங்காமில் நடந்த 3-வது டி20 போட்டியில் ரிஷப் பண்ட் மாஸ்க்கை அணிந்த தோனி தனது சிஷ்யனுக்கு ரசிகனாக மாறி இந்தியாவுக்கும் ஆதரவு கொடுத்தது சமூக வலைதளங்களில் வைரலானது.

Advertisement