யாரை வேண்டுமென்றாலும் வேர்ல்டுகப் டீம்ல இருந்து தூக்கலாம் – ஆனா இவங்க 2 பேரையும் அசைக்கக்கூட முடியாது

IND
Advertisement

இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் பத்து நாடுகளை சேர்ந்த அணிகளின் வீரர்களையும் செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி கெடு விதித்திருந்தது. அந்த வகையில் ஏற்கனவே சில நாடுகளைச் சேர்ந்த அணிகள் தங்களது உலகக்கோப்பை அணியை அறிவித்திருந்தனர். அதே வேளையில் இந்த கெடுவின் கடைசி நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி நேற்று இந்திய கிரிக்கெட் அணியும் தங்களது உலகக்கோப்பை அணியினை வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த அணியில் இடம் பெற்றுள்ள 15 பேர் கொண்ட அணித்தேர்வின் மீதும் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் மீதும் தற்போது காரசாரமான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதோடு இந்த உலகக் கோப்பை தொடரின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்து விளையாடப்போகும் வீரர்கள் யார்? யார்? என்பது குறித்தும் பலரும் பேசி வருகின்றனர்.

- Advertisement -

அதுமட்டும் இன்றி ரசிகர்களும் தங்களது பங்கிற்கு இந்திய அணியின் வீரர்கள் குறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் எதிர்வரும் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்த இரு வீரர்களுக்கு மட்டும் மாற்றே கிடையாது என்று கூறப்படும் வீரர்களாக ஹார்டிக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இருக்கின்றனர்.

ஏனெனில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுக்கு ஏகப்பட்ட போட்டி இருந்தாலும் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஜடேஜா மற்றும் பாண்டியாவை பிளேயிங் இருந்து நீக்க முடியாது என்ற கருத்தே பலரது மத்தியிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

ஏனெனில் சமீப காலமாகவே இந்திய அணி தரமான ஆல்ரவுண்டர்கள் இல்லாமல் வறட்சியில் இருக்கிறது. அவர்கள் இருவரை தவிர்த்து அக்சர் பட்டேல் மட்டுமே தற்போதைய இந்திய அணியில் ஆல்ரவுண்டராக இருக்கிறார். ஆனால் அக்சர் பட்டேலையும் தாண்டி எந்த ஒரு வீரரும் ஆல்ரவுண்டாக இந்திய அணியில் இடம் பெறவில்லை. எனவே ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் உலகக் கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவது தற்போதே உறுதி ஆகியுள்ளது.

இதையும் படிங்க : 50 ஓவர் உலககோப்பையில் ஒரே மாதிரியான இந்த 3 வீரர்கள் எதுக்கு? தவறை சுட்டிக்காட்டிய – ரசிகர்கள்

அவர்களை தவிர்த்து இந்திய அணியில் ஒட்டுமொத்தமாக ஆல்ரவுண்டர்கள் என்று பார்த்தால் விஜய் ஷங்கர், சிவம் துபே, சபாஷ் அகமது போன்ற ஒரு சிலர் மட்டுமே இருக்கின்றனர். ஆனால் அவர்களும் எப்போதாவது ஒருமுறைதான் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement