50 ஓவர் உலககோப்பையில் ஒரே மாதிரியான இந்த 3 வீரர்கள் எதுக்கு? தவறை சுட்டிக்காட்டிய – ரசிகர்கள்

Jadeja-axar-Kuldeep
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட வேளையில் இந்திய உலகக்கோப்பை அணியின் தேர்வு குறித்து பல்வேறு விமர்சனங்கள் சமூகவலைதளம் மூலம் எழுந்து வருகின்றன.

அதோடு ரசிகர்களும் இந்த அணித்தேர்வில் உள்ள ஒரு சில குறைகளையும் சுட்டிக்காட்டி தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்கள் முக்கியமான ஒரு விடயமாக சுட்டிக் காட்டுவது யாதெனில் :

- Advertisement -

இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுமே இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் என்பதுதான். அதிலும் குறிப்பாக அக்சர் பட்டேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஒரே மாதிரியான வீரர்கள் என்பதனை தெளிவாக ரசிகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். அதாவது ஜடேஜாவைப் போன்றே அக்சர் பட்டேலும் பேட்டிங்கில் பெரிய அளவில் கை கொடுக்கக் கூடியவர்.

அதுமட்டும் இன்றி இருவருமே ஒரே மாதிரி பவுலிங் செய்யும் ஸ்டைலை கொண்டவர்கள். எனவே ஜடேஜாவிற்கு பேக்கப் வீரராக அக்சர் பட்டேல் இருக்கிறார். அதேபோன்று மூன்றாவது சுழற்பந்து வீச்சாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள குல்தீப் யாதவும் ஒரு இடது கை முழுநேர சுழற்பந்து வீச்சாளர் ஆவார்.

- Advertisement -

இப்படி இந்திய அணியில் இடம் பிடித்துள்ள மூன்று சுழற்பந்து வீச்சாளர்களும் இடதுகை சுழற்பந்து வீச்சாளர்கள் என்பதினால் அவர்களில் யாராவது ஒருவர் நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக வலதுகை-யில் பந்து வீசும் அஸ்வின் மற்றும் சாஹலை தேர்ந்தெடுக்கலாம் என்று ரசிகர்கள் இந்த தேர்வின் தவறினை சுட்டிக்காட்டி உள்ளனர்.

இதையும் படிங்க : வெறும் 10 ரன் மட்டுமே அடிச்ச அவருக்கு எதுக்கு வேர்ல்டுகப்ல சேன்ஸ் குடுத்தீங்க – கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் காட்டம்

ஏற்கனவே இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தியும் அவர்களின் இடத்தை நிரந்தரமாக மாற்றாமல் மீண்டும் பழையபடிக்கு சென்று வீரர்களை தேர்வு செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதே வேளையில் இந்திய அணி இந்தத் தொடரை வெல்லுமா? என்பதிலும் பெரிய குழப்பமே உள்ளதாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Advertisement