நம்ம ரூட்டு தான் கரெக்ட்.. எவ்ளோ காசு கொடுத்தாலும் அது கிடைக்காது.. கம்பீர் பாராட்டு

Gautam Gambhir 55
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்தித்த இந்திய அணியில் தலைமை பொறுப்பில் மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக 2021இல் பொறுப்பேற்ற பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நிறைவு பெற்றதால் இத்துடன் விடை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் 2024 டி20 உலகக் கோப்பை வரை மீண்டும் அவர் இந்தியாவின் பயிற்சியாளராக செயல்படுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

2023 ஆசிய கோப்பையை தவிர்த்து எஞ்சிய தொடர்களில் அவருடைய தலைமையில் இந்தியா தோல்விகளை சந்தித்ததால் நிறைய ரசிகர்கள் டிராவிட் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர். இருப்பினும் 2022 டி20 உலகக் கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை என அடுத்தடுத்த ஐசிசி தொடர்களில் சிறப்பாக விளையாடி தொடர்ந்து இந்தியா குறைந்தபட்சம் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

கம்பீர் பாராட்டு:
அதனால் மீண்டும் டிராவிட் பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதற்கு சில முன்னாள் வீரர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அனில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி வரிசையில் ராகுல் டிராவிட் என கடந்த 10 வருடங்களாக இந்திய அணிக்கு இந்தியர்களே பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு வருவது மிக சிறப்பான முடிவு என்று கௌதம் கம்பீர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வெளிநாட்டு பயிற்சியாளர்கள் பணத்திற்காக மட்டுமே வேலை செய்வார்கள் என்று தெரிவிக்கும் கம்பீர் இந்தியர்கள் மட்டுமே இந்தியா வெல்ல வேண்டும் என்ற உணர்வுடன் மனதுக்குள் இருந்து பயிற்சிகளை கொடுப்பார்கள் என தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா அல்லது பாகிஸ்தான் போன்ற அணிகளுக்கு இந்தியர் அல்லது பாகிஸ்தானியர்கள் பயிற்சியாளராக இருக்க வேண்டும்”

- Advertisement -

“இதை நான் சொல்லும் போது அனைவரும் கேரி க்ரிஸ்டன் தலைமையில் நாம் உலகக்கோப்பை வென்றோமே என்று கேட்கிறார்கள். ஆனால் ராகுல் டிராவிட் போன்றவர் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து வேலை செய்யும் போது உணர்ச்சியுடன் செயல்படுவார். வெளிநாட்டு பயிற்சியாளர்கள் அதைக் கொண்டிருக்க மாட்டார்கள். இந்த வகையில் சமீப காலங்களில் நாம் அந்த வேலைக்காக வெளிநாட்டைவர்களை பார்க்கவில்லை”

இதையும் படிங்க: இதுவரை விளையாடாமல் இருக்கும் 2 இந்திய வீரர்களுக்கு கடைசி போட்டியில் களமிறங்க வாய்ப்பு – விவரம் இதோ

“நாம் கடந்த 10 அல்லது 15 வருடங்களுக்கு முன்பாக மட்டும் கிரிக்கெட்டில் விளையாட துவங்கவில்லை. விளையாட்டில் எப்போதுமே உணர்வுகள் முக்கியம். பொருளாதார ரீதியான பார்வையும் அவசியம். ஆனால் அணியின் ஜெர்சியை அணியும் போது உங்களின் கண்களில் ஆனந்த கண்ணீர் வரவேண்டும். எனவே டிராவிட் விரும்பினால் பதவி நீட்டிப்பு செய்யுங்கள். அல்லது வேறு ஏதேனும் இந்தியர் மட்டுமே இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement