இப்படி பண்ணா நாங்க எப்படி விளையாட முடியும். வெ.இ.சில் இந்திய வீரர்கள் தவிப்பு – பி.சி.சி.ஐ தான் முடிவு எடுக்கனும்

BCCI
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஜூலை 27-ஆம் தேதி இன்று முதல் நடைபெற இருக்கிறது.

IND-vs-WI

- Advertisement -

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி முடிவடைந்த 2 நாட்களில் ஒருநாள் தொடர் ஆரம்பித்துள்ளதால் இந்திய அணி பயிற்சிகளை மேற்கொள்ள சரியான அவகாசம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் டிரினிடாட்டில் நாட்டில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு இந்திய அணி வீரர்கள் உடனடியாக ஒருநாள் தொடருக்கான பயணத்தை மேற்கொண்ட போது சிரமத்தை சந்தித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஏனெனில் ட்ரினிடாட்டில் இருந்து பார்படாஸ் நகருக்கு வருவதற்கு இந்திய அணி விமானப்பயணம் மேற்கொண்டது.

IND-vs-WI-1

இந்நிலையில் இரவு 11 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய வீரர்கள் சரியாக தூங்கக்கூட முடியாமல் சிக்கலை சந்தித்துள்ளனர்.

- Advertisement -

அதேபோன்று டிரினிடாட் நாட்டில் இருந்து பார்படாஸ் வந்தடைந்து ஹோட்டலுக்கு செல்லவே நேரம் பிடித்ததால் அதன் பிறகு இந்திய வீரர்கள் பயிற்சிக்கான நேரத்தையும் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த இந்திய அணி வீரர்கள் : கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ-க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : IND vs WI : உங்களுக்கு என்னோட மார்க் 10க்கு 4 தான், டெஸ்ட் தொடரில் ஏமாற்றிய இளம் வீரர் மீது – ஜஹீர் கான் அதிருப்தி

அதில் இனிமேல் இரவுநேர பயணத்தை தவிர்க்குமாறும், வீரர்கள் பகலிலேயே பயணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு பி.சி.சி.ஐ தரப்பில் இருந்து இனிமேல் இது போன்ற பிரச்சனைகள் வராமல் சரியான திட்டமிடுதலை மேற்கொள்வதாகவும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement