IND vs WI : உங்களுக்கு என்னோட மார்க் 10க்கு 4 தான், டெஸ்ட் தொடரில் ஏமாற்றிய இளம் வீரர் மீது – ஜஹீர் கான் அதிருப்தி

Zaheer Khan
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 0 என்ற கணக்கில் வென்ற இந்தியா 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவங்கியது. அந்த தொடரில் அறிமுகமாக வாய்ப்பு பெற்ற யசஸ்வி ஜெய்ஸ்வால் முதல் போட்டியிலேயே சதமடித்து ஆட்டநாயகன் விருது வென்று ஏராளமான சாதனைகள் படைத்து அசத்திய நிலையில் 2வது போட்டியில் வாய்ப்பு பெற்ற முகேஷ் குமாரும் சிறப்பாக செயல்பட்டார்.

Ishan Kishan and Gill

- Advertisement -

இருப்பினும் அந்தத் தொடரில் கம்பேக் கொடுத்த அஜிங்க்ய ரகானே சுமாராக செயல்பட்டதை விட நல்ல ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் 6, 10, 29 என சொற்ப ரன்களில் அவுட்டானது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. ஏனெனில் 2018 அண்டர்-19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருது வென்று சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் 2021 காபா வெற்றியில் 91 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றி 2022 ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து குஜராத் கோப்பையை வெல்வதற்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

ஜஹீர் கான் ஏமாற்றம்:
அப்போதிலிருந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் நிலையான வாய்ப்புகளை பெற்ற அவர் ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்களில் அடுத்தடுத்த தொடர் நாயகன் விருதுகள் வென்று கடந்த டிசம்பரில் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சதமடித்தார். அதை விட கடந்த பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமும் டி20 கிரிக்கெட்டில் சதமும் அடித்த அவர் 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பையிலும் சதமடித்ததால் சச்சின், விராட் கோலி ஆகியோரது வரிசையில் இந்தியாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மனாக பார்க்கப்படுகிறார்.

Shubman Gill 1

இருப்பினும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் சுமாராகவே செயல்பட்ட அவர் பலவீனமான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த தொடரிலும் ஒரு அரை சதம் கூட அடிக்காதது தமக்கு ஏமாற்றமளிப்பதாக முன்னாள் வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். குறிப்பாக புஜாரா விளையாடிய 3வது இடத்தை முழுமையாக தன் வசமாக்குவதற்கு கிடைத்த வாய்ப்பை சுப்மன் கில் தவறவிடும் வகையில் செயல்பட்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவருக்கு நான் 10க்கு 4 மதிப்பெண்கள் மட்டுமே கொடுப்பேன். குறிப்பாக இந்த தொடரில் அசத்தியவர்களை 5க்கு மேல் உள்ள மதிப்பெண் பட்டியலிலும் சுமாராக செயல்பட்டவர்களை 5க்கும் குறைவான பட்டியலிலும் சேர்ப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் புஜாரா போன்ற ஒருவர் இனிமேல் தேர்வு செய்யப்பட மாட்டார் என்று கருதும் அணி நிர்வாகம் உங்களுக்கு அந்த வாய்ப்பை கொடுத்துள்ளது”

Zaheer

“இதுவே உங்களுக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய சமிக்கையாகும். மேலும் அந்த 2 போட்டிகளிலுமே ஓப்பனிங் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அழுத்தமற்ற சூழ்நிலையில் களமிறங்கும் வாய்ப்பை கொடுத்தும் அது அவருக்கு உதவவில்லை. பொதுவாக நீங்கள் தொடக்க வீரராக களமிறங்கும் போது நிறைய நேரங்களை எடுத்துக் கொள்வீர்கள். மேலும் பந்தும் புதிதாக பவுன்ஸாகி வரும் என்பதால் நீங்கள் டைமிங் கொடுத்து சிறப்பாக அடிக்க முடியும். இருப்பினும் அந்த 2 போட்டிகளில் ஓப்பனிங் ஜோடி பெரிய இன்னிங்ஸ் விளையாடியதால் பந்து தேய்ந்திருக்கும்”

- Advertisement -

“அந்த சூழ்நிலைக்கேற்றார் போல் நீங்கள் நேரம் எடுத்து உங்களுடைய மனதை மாற்றி 3வது இடத்திற்கு தகுந்தார் போல் விளையாட வேண்டும்” என்று கூறினார். முன்னதாக சவாலான ஆசிய கண்டத்திற்கு வெளியே 8, 28, 4, 17, 13, 18, 6, 10, 29* என சமீபத்திய போட்டிகளில் சுப்மன் கில் நல்ல ஃபார்மில் இருந்தும் தொடர்ந்து சுமாராக செயல்பட்டு வருவது ஒரு தரப்பு ரசிகர்களுடைய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:அடுத்த 5 மாசத்துக்கு சர்வதேச போட்டிகளில் தமிழக வீரர் அஷ்வினை பார்க்கவே முடியாதாம் – வெளியான தகவல்

எனவே சொந்த மண்ணை போலவே வரும் டிசம்பரில் நடைபெறும் தென்னாப்பிரிக்க தொடர் உட்பட வருங்காலங்களில் அவர் வெளிநாடுகளில் சிறப்பாக செயல்பட்டு தன்னுடைய தரத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement