ரோஹித் சர்மாவால் வந்துள்ள பிரச்னை. ஒருநாள் அணியை தேர்வு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் – காரணம் என்ன?

Rohith-3
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரானது தற்போது தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிவடைந்த பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் அங்கு நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது ஒருநாள் அணியும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியானது. ஆனால் டெஸ்ட் தொடரானது துவங்கிய பின்னரும் இதுவரை ஒருநாள் தொடருக்கான அணி அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது.

INDvsRSA

- Advertisement -

எதிர்வரும் ஜனவரி 19, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவித்தால் மட்டுமே இந்தியாவில் இருக்கும் வீரர்கள் அங்கு சென்று பயோ பபுளில் கலந்துகொள்ள முடியும். இந்நிலையில் இந்திய ஒருநாள் தொடருக்கான அணி தேர்வு செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் யாதெனில் மும்பையில் நடைபெற்ற பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்த ரோகித்சர்மா இன்னும் பெங்களூரில் தங்கி தனது சிகிச்சையை பெற்று வருகிறார். இதனால் விரைவில் அவர் உடல் தகுதி பெற்று ஒருநாள் தொடருக்கான அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இன்னும் அவரது உடற்தகுதி குறித்த இறுதி முடிவுகள் வெளியாகவில்லை.

rohith 1

இதன் காரணமாக ஒருநாள் தொடரின் அணித்தேர்வு வரும் டிசம்பர் 30 அல்லது 31 ஆகிய தேதிகளில் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. அதற்குள் ரோகித் சர்மா முழு தகுதி அடைந்து விடுவார் என்று பிசிசிஐ காத்திருக்கிறது. ஒருவேளை அவர் தகுதி அடையாத பட்சத்தில் கேஎல் ராகுல் ஒருநாள் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : யாரை விட்டாலும் உங்களை விடமாட்டோம். சீனியர் வீரரை அணியில் எடுக்கவிருக்கும் சி.எஸ்.கே – மாஸ் பிளான்

அதேவேளையில் இந்த ஒருநாள் தொடருக்கான அணியில் அஷ்வின் மற்றும் சாகல் ஆகியோர் அணியில் மீண்டும் இடம் பிடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோருக்கும் இடம் கிடைப்பது உறுதி என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement