IND vs ZIM : 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – 15 பேர் கொண்ட லிஸ்ட் இதோ

INDvsZIM
- Advertisement -

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்து ஜிம்பாப்வே நாட்டிற்கு பயணிக்கும் இந்திய அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்திய அணி சமீபமாகவே தொடர்ச்சியாக பல தொடர்களில் விளையாடி வருவதால் இந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டது.

அதே வேளையில் இந்த ஜிம்பாப்வே தொடருக்கான மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை நேற்று பி.சி.சி.ஐ தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதில் முக்கிய சீனியர் வீரர்கள் அனைவருக்கும் ஓய்வளிக்கப்பட்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை கேப்டனாக வழிநடத்திய ஷிகார் தவான் இந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் கேப்டனாக வழி நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

அவரது தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த தொடருக்கான இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், சன்ரைசர்ஸ் அணியின் வீரரான ராகுல் திரிப்பாதி ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடி வரும் பல்வேறு இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சமீப காலமாகவே காயம் காரணமாக விளையாடாமல் இருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார் என்பது மகிழ்ச்சியான விடயம்.

- Advertisement -

அதன்படி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இதோ :

இதையும் படிங்க : IND vs WI : பும்ராவுடன் அவரும் சேர்ந்து தெறிக்கவிடுவதை பார்க்க காத்திருக்கோம் – இளம் இந்திய பவுலரை மனதார பாராட்டும் ரசிகர்கள்

1) ஷிகார் தவான், 2) ருதுராஜ் கெய்க்வாட், 3) சுப்மன் கில், 4) தீபக் ஹூடா, 5) ராகுல் திரிப்பாதி, 6) இஷான் கிஷன், 7) சஞ்சு சாம்சன், 8) வாஷிங்க்டன் சுந்தர், 9) ஷர்துல் தாகூர், 10) குல்தீப் யாதவ், 11) அக்சர் படேல், 12) ஆவேஷ் கான், 13) பிரசித் கிருஷ்ணா, 14) முகமது சிராஜ், 15) தீபக் சாகர்

Advertisement