வாழ்வா – சாவான்னு ஆடிருக்கணும்.. ஃபைனலில் இந்திய அணியின் முக்கிய தவறை சுட்டிக்காட்டிய வாசிம் அக்ரம்

Wasim Akram 7
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அத்தொடரில் ஆரம்பம் முதலே சொந்த மண்ணில் அசத்திய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் 9 வெற்றிகளை பெற்று செமி ஃபைனலில் நியூசிலாந்தை தோற்கடித்ததால் 2011 போல கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பினார்.

ஆனால் அகமதாபாத் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சுமாராக விளையாடிய இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்து வெற்றியை கோட்டை விட்டது. குறிப்பாக அப்போட்டியில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடிய போதிலும் கில், ஷ்ரேயாஸ் ஆகியோர் ஏமாற்றத்தை கொடுத்ததால் 81/3 என்ற சுமாரான துவக்கத்தை பெற்று இந்தியா தடுமாறியது.

- Advertisement -

வாழ்வா – சவால் நிலை:
அப்போது நிதானமாக விளையாடிய விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் ஒரு கட்டத்திற்கு பின் அதிரடியை காட்டாமல் நிதானமாகவே விளையாடி முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்து பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் கடைசி 40 ஓவர்களில் இந்தியா வெறும் 4 பவுண்டரிகள் மட்டுமே எடுத்தது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்நிலையில் மாபெரும் இறுதிப் போட்டியில் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வாழ்வா – சாவா என்ற மனநிலையுடன் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடியிருக்க வேண்டும் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். குறிப்பாக எப்படி விளையாடினாலும் அனைவரும் விமர்சிக்க தான் போகிறார்கள் என்பதை உணர்ந்து கேஎல் ராகுல் சற்று அதிரடியாக விளையாடியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்தியாவின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணத்தை நான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு மிடில் ஆர்டரை சொல்வேன். அவர்கள் வாழ்வா – சாவா என்ற மனநிலமையுடன் விளையாடி இருந்திருக்க வேண்டும். அந்த சமயத்தில் ராகுல் என்ன மனநிலையுடன் விளையாடியிருப்பார் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். அதாவது ஜடேஜாவுக்கு பின் பேட்டிங் வரிசையில் ஆழமில்லாததால் நாம் ரிஸ்க் எடுத்து விளையாடினால் அவுட்டாகி விடுவோம் என்ற எண்ணத்துடன் ராகுல் மெதுவாக விளையாடினர்”

இதையும் படிங்க: ஒருவேளை இந்தியா அப்படி செஞ்சுருந்தா.. அதை விட முட்டாள்தனம் இருக்க முடியாது.. ராயுடு விமர்சனம்

“ஒருவேளை அடுத்ததாக பாண்டியா இருந்திருந்தால் ராகுல் ரிஸ்க் எடுத்து விளையாடியிருப்பார். ஆனால் ஒருவேளை அப்படி ரிஸ்க் எடுத்து விளையாடி அவுட்டாகியிருந்தாலும் அனைவரும் விமர்சித்திருப்பார்கள். எனவே மிடில் ஓவர்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் இன்னும் சற்று அதிகப்படியான வேகத்தில் ரன்கள் எடுத்திருந்தால் அந்த போட்டி வேறு மாதிரி இருந்திருக்கும்” என்று கூறினார்.

Advertisement