ஒருவேளை இந்தியா அப்படி செஞ்சுருந்தா.. அதை விட முட்டாள்தனம் இருக்க முடியாது.. ராயுடு விமர்சனம்

Ambati Rayudu 2
- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்தது. ஏனெனில் லீக் சுற்றில் தொடர்ந்து 9 வெற்றிகளை பெற்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி செமி ஃபைனலில் நியூசிலாந்தை தோற்கடித்து உச்சகட்ட ஃபார்மில் இருந்ததால் கண்டிப்பாக 2011 போல கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் ஆழமான நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

இருப்பினும் அகமதாபாத் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்து வெற்றியை கோட்டை விட்டது. குறிப்பாக கடைசி 40 ஓவர்களில் வெறும் 4 பவுண்டரிகள் மட்டுமே அடித்தது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்தளவுக்கு போட்டி நடைபெற்ற அகமதாபாத் பிட்ச் மதிய நேரத்தில் பேட்டிங்க்கு மிகவும் சவாலாக இருந்தது.

- Advertisement -

ராயுடு அதிருப்தி:
முன்னதாக தங்களுடைய பலமான சுழலை பயன்படுத்தி வெற்றி பெறுவதற்காக இந்தியா அகமதாபாத் பிட்ச்சை சுழலுக்கு சாதகமாக இருக்கும் வகையில் அமைத்ததே தோல்விக்கு காரணம் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிரட் லீ தெரிவித்திருந்தார். அதே போல அனைத்து பேட்ஸ்மேன்களும் நல்ல ஃபார்மில் இருந்ததால் இதே போட்டி மும்பை போன்ற வேறு மைதானத்தில் நடந்திருந்தால் இந்தியா தான் கண்டிப்பாக வென்றிருக்கும் என்று ஹர்பஜன் சிங் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் ஃபைனல் நடைபெற்ற அகமதாபாத் பிட்ச் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமாக இல்லை என்று அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். ஒருவேளை அது போன்ற சுழலுக்கு சாதகமான பிட்ச் தங்களுக்கு வேண்டுமென்று இந்திய அணி நிர்வாகம் கேட்டிருந்தால் அதை விட வெறும் முட்டாள்த்தனம் இருக்க முடியாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியுல் பேசியது பின்வருமாறு. “ஆடுகளம் மெதுவாகவும் மந்தமாகவும் இருந்தது”

- Advertisement -

“எனவே அது போன்ற ஆடுகளத்தில் நீங்கள் இறுதிப்போட்டியில் விளையாட விரும்ப மாட்டீர்கள். இது யாருடைய ஐடியா என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை அது சாதாரணமாக இருந்திருந்தால் கூட ஃபைனல் நன்றாக அமைந்திருக்கும். துரதிஷ்டவசமாக அது அப்படி இல்லை. குறிப்பாக போட்டி முழுவதும் பிட்ச் ஒரே மாதிரியாக இல்லை. 2வது இன்னிங்ஸில் அது பிளாட்டாக மாறியது”

இதையும் படிங்க: ஐ.பி.எல் தொடரில் பாண்டியாவிற்கு முன்னதாக டிரேடிங் முறையில் அணி மாற்றம் செய்யப்பட்ட 2 கேப்டன்கள் – யார் தெரியுமா?

“இரவு நேரத்தில் பனி வரும் என்பதை நன்றாக தெரிந்த இந்திய பேட்ஸ்மேன்கள் ஆடுகளம் சாதாரணமாக இருந்திருந்தால் பெரிய ரன்கள் அடித்திருப்பார்கள். அங்கே தான் தவறு நடந்தது. ஃபைனலில் சொந்த மண்ணில் விளையாடும் அணி பிட்ச் பற்றி எதுவும் சொல்லியிருக்கக் கூடாது. அது சரியான ஆடுகளத்தில் நடந்திருந்தால் டாஸ் என்பது வெற்றியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திருக்காது. ஒருவேளை யாராவது அது போன்ற மெதுவான பிட்ச்சை உருவாக்கி கொடுங்கள் என்று கேட்டிருந்தால் அதை நான் முட்டாள்தனம் என சொல்வேன்” என்று கூறினார்.

Advertisement