ஐ.பி.எல் தொடரில் பாண்டியாவிற்கு முன்னதாக டிரேடிங் முறையில் அணி மாற்றம் செய்யப்பட்ட 2 கேப்டன்கள் – யார் தெரியுமா?

IPL
- Advertisement -

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹார்டிக் பாண்டியா 2024-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக தற்போது டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மாறயிருக்கிறார் என்று வெளியாகி வரும் செய்திகள் தற்போது இணையத்தில் அதிகளவு வைரலாகி வருகிறது. ஏனெனில் கடந்த 2022-ஆம் ஆண்டு மும்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அப்படி தான் கேப்டன் பொறுப்பை ஏற்ற அறிமுக ஆண்டிலேயே மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய ஹார்டிக் பாண்டியா அந்த அணியை அறிமுக தொடரிலேயே சாம்பியன் பட்டத்தினை வென்று அசத்த முக்கிய காரணமாக திகழ்ந்தார். அதோடு நடைபெற்று முடிந்த 2023-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரிலும் இறுதிப்போட்டி வரை குஜராத் அணியை கொண்டு சென்று இருந்தார்.

- Advertisement -

இப்படி இரண்டு தொடர்களிலுமே அற்புதமான கேப்டன்சியை வெளிப்படுத்திய அவர் இந்திய டி20 அணிக்கும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இப்படி கேப்டன் பொறுப்பினை ஏற்றதில் இருந்தே அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் ஹார்டிக் பாண்டியா தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக டிரேடிங் செய்யப்பட இருப்பதாகவும் அப்படி அவர் மும்பைக்கு செல்லும் பட்சத்தில் ரஷீத் கான் குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இந்நிலையில் இப்படி ஒரு அணியின் கேப்டனை டிரேடிங் முறையில் மாற்றுவது என்பது குறித்த செய்தி அதிகளவில் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வரும் வேளையில் இதற்கு முன்னதாக இதேபோன்று கேப்டன்களை டிரேடிங் முறையில் ஏதாவது அணி மாற்றி இருக்கிறதா? என்பது குறித்த கேள்வி அனைவரது மத்தியிலும் இருக்கிறது.

- Advertisement -

அந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் நாங்கள் இங்கே உங்களுக்காக சில குறிப்புகளை வழங்கியுள்ளோம். அதன்படி ஏற்கனவே கடந்த 2020-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த அஸ்வினை டிரேடிங் முறையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வாங்கி இருந்தது.

இதையும் படிங்க : இந்தியாவுக்காக அந்த பெரிய வெற்றியை பெற்றுக் கொடுக்கும் நாளுக்காக காத்திருக்கேன்.. ரிங்கு சிங் பேட்டி

அதேபோன்று 2019-ஆம் ஆண்டு ரஹானே ராஜஸ்தான அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த வேளையில் அவரை டெல்லி கேப்பிடல்ஸ் அணி டிரேடிங் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி இரண்டு கேப்டன்கள் ஏற்கனவே டிரேடிங் முறையில் அணிமாற்றம் செய்யப்பட்டிருந்த வேளையில் தற்போது மூன்றாவது வீரராக பாண்டியா அந்த பட்டியலில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement